அண்மையில், லாசா நகரிலும் இதர திபெத் இன பிரதேசங்களிலும் நிகழ்ந்த வன்முறை நடவடிக்கைகள், மத பிரச்சினைகளாக அல்ல. தாலாய் லாமா குழு, மதத்தின் கொடியை பயன்படுத்தி, நாட்டின் ஒன்றிணைப்பையும், தேசிய ஒற்றுமையையும் சீர்குலைத்த சான்று, இதுவாகும் என்று சீன திபெத்தியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளரும் திபெத் இன அறிஞருமான Sonam Doji இன்று நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
மத நம்பிக்கை சுதந்திரம் என்னும் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது. இக்கொள்கை, திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று திபெத் இன மக்களுக்கு, மத நம்பிக்கை சுதந்திரம் இல்லை என்று தாலாய் லாமா குழு, வெளிநாடுகளில் பரவல் செய்வது குறித்து பேசிய போது அவர் தெரிவித்தார்.
|