• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-27 09:27:34    
சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள்

cri
நேற்றிரவு, சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ், அழைப்பின் பேரில், அமெரிக்க அரசுத் தலைவர் புஷுடன், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

தைவான் பிரச்சினை பற்றி பேசுகையில், ஒரே ஒரு சீனா என்ற கொள்கையில் ஊன்றி நிற்பதை, புஷ் மற்றும் அமெரிக்க அரசு, பன்முறை தெரிவித்தமைக்கு பாராட்டு தொரிவித்தப்பட்டது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மூன்று கூட்டறிக்கையைப் பின்பற்றி, தைவான் சுதந்திரத்தையும், தைவான் ஐ.நாவில் சேர்வது பற்றிய பொது மக்கள் வாக்கெடுப்பையும், ஐ.நா மற்றும் பிற இறையாண்மை நாடுகள் மட்டுமே சேரக் கூடிய சர்வதேச அமைப்புகளில் தைவான் சேர்வதையும் எதிர்த்ததை ஹுசிந்தாவ், பாராட்டினார். தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்துக்கு, சீனா மற்றும் அமெரிக்கா கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

லாசாவில் நிகழ்ந்த அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள் பற்றி, உரையாடிய போது கடுமையாக மனித உரிமையை ஊறுபடுத்தி, சமூகத்தின் ஒழுங்கைச் சீர்குலைத்து, பொது மக்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவித்த வன்முறை குற்றச் செயல்களைக் கண்டு, பொறுப்பேற்றுள்ள எந்த அரசும், வெறுமனே வேடிக்கை பார்க்காது என்று ஹுசிந்தாவ் சுட்டிக்காட்டினார்.

தலாய், திபெத் சுதந்திரம் என்ற கருத்தை உண்மையாகவே கைவிட்டு விட்டு, தாய்நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி, குறிப்பாக, தற்போது திபெத் முதலிய பிரதேசங்களில் திட்டமிட்ட வன்முறையான குற்றச் செயல்கள் மற்றும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, திபெத் மற்றும் தைவான் சீன உரிமை பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என்பதை ஏற்றுக்கொள்ளும் போது தான், சீன அரசு, அவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்து கலந்தாலோசிக்க விரும்பும் என்று ஹுசிந்தாவ் வலியுறுத்தினார்.