அண்மையில், திபெத்துக்கு வழங்கிய உதவி திட்டங்கள் மற்றும் ஒதுக்கீட்டு முதன்மை, நகரங்களிலிருந்து வேளாண் மற்றும் கால்நடைப் பிரதேசங்களுக்கு மாறியுள்ளது. இது, திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைகளை, பெரிதாக மேம்படுத்தும்.
திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் எண்ணிக்கை, முழு பிரதேசத்தின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டுக்கு மேலாகும். 2006ம் ஆண்டு முதல், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடியிருப்புத் திட்டப்பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, 170 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. வரும் 3 ஆண்டுகளில், ஒதுக்கீடு செய்யவுள்ள 300 கோடி யுவான் உதவித் தொகையிலுள்ள பெரும் பகுதி, வேளாண் மற்றும் கால் நடைப் பிரதேசங்களின் குடியிருப்புத் திட்டப்பணியில் பயன்படுத்தப்படும். ஆயர்களின் குடியிருப்பு, வறுமை ஒழிப்பு, குடி பெயர்ச்சி, வீட்டுச் சீரமைப்பு ஆகியவற்றை இத்திட்டப்பணி, மேற்கொள்ளும். 2010ம் ஆண்டுக்குள், திபெத்தின் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆயர்களை பாதுகாப்பான, வசதியான வீடுகளில் தங்கச் செய்யப் பாடுபடும். அதே வேளையில், அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தையும் அரசு வலுப்படுத்தி, கல்வி, நலவாழ்வு மற்றும் பண்பாட்டு இலட்சியத்தின் வளர்ச்சியையும் விரைவுபடுத்தும்.
|