திபெத் பண்பாடு அழிகிறது என்ற தலாய்லாமா குழுவின் கூற்று நிறுத்தப்பட வேண்டும் என்று சிங்குவா செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட விமர்சனத்தில் தெரிவித்தது.
ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சுமார் 50 ஆண்டுகளில், பாரம்பரியத்தைக் கையேற்று திபெத் இனத்தின் தனிச்சிறப்பை நிலைநிறுத்துவதன் அடிப்படையில் திபெத் பண்பாடு புதிய முன்னேற்றமடைந்துள்ளது. நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை உரிமையாளர்கள் ஏகபோகம் ஒரு சிலர் செய்த திபெத் பண்பாட்டு நிலை அழிக்கப்பட்டது. அத்துடன், கூட்டாகக் கையேற்று, வளர்ந்து, பகிர்ந்து கொண்டு வரும் திபெத் பண்பாட்டின் முக்கிய பகுதியாக, திபெத் மக்கள் மாறியுள்ளனர் என்று இந்த விமர்சனம் கூறுகிறது.
கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தில் பழமையை புரட்டி போட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. திபெத் மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பன்முகங்களில் அனுபவித்தனர். மக்களின் வாழ்க்கை நிலை பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளது. தலாய்லாமா குழு வெளிநாட்டில் பரப்பிய திபெத் பண்பாடு அழிகிறது என்ற கருத்தில், உண்மையான சான்று ஏதுமில்லை என்று சீனப் புத்த மதச் சங்கத்தின் திபெத் தன்னாட்சி பிரதேசக் கிளையின் துணைத் தலைவர் ngawang tezin தெரிவித்தார்.
|