• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-27 14:26:17    
திபெத் வாழும் புத்தர்களின் கருத்துக்கள்

cri

திபெத்துக்கு சாபக்கேட்டை விளைவித்து, திபெத் மதத்தைச் சீர்குலைக்கும் தலாய்லாமா குழுவின் உண்மை உருவத்தை, மார்ச் 14ம் நாள் லாசாவில் நடைபெற்ற கடுமையான வன்முறை நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது என்று திபெத் மதத் துறவிகள் அண்மையில் தெரிவித்தனர்.


சில துறவிகளைப் பயன்படுத்தி, தலாய் பல்வேறு தகராறுகளை உருவாக்கினார். இந்நடவடிக்கை, சீரான மத ஒழுங்கைச் சீர்குலைத்துள்ளது மட்டுமல்ல, புத்த மதத்தின் கோட்பாட்டுக்கும் முற்றிலும் புறம்பானது என்று சீன புத்த மத சங்கத்தின் திபெத் கிளையின் துணைத் தலைவர் ngwang tenzin கூறினார்.

 
திபெத்தின் பல்வேறு சிறிய மற்றும் பெரிய கோயில்களின் வாழும் புத்த மத துறவிகளும், பிரிவினைவாதிகளின் சாராம்சத்தைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சீன புத்த மத சங்கத்தின் திபெத் கிளையின் தலைவரும், naqujiaodeng கோயிலின் வாழும் புத்த துறவியான dupkang·tupden kedup வேண்டுகோள் விடுத்தார்.


மதத்தின் விதிகளைப் பின்பற்றாத சில துறவிகள், இயல்பான மத ஒழுங்கைச் சீர்குலைத்து, மதத் துறை மற்றும் மத நம்பிக்கை கொண்ட பரந்து பட்ட பொது மக்களின் அடிப்படை நலனுக்குத் தீங்கு விளைவித்தனர் என்று திபெத்தின் dazha கோயிலின் வாழும் புத்தர் தெரிவித்தார்.