மார்ச் 14ம் நாள் லாசாவில் நிகழ்ந்த கடும் வன்செயல்களான அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள், திபெதிலான பல்வேறு தேசிய இன மக்களின் மனித உரிமையைக் கடுமையாக சீர்குலைத்துள்ளன. சிங்குவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் இன்று வெளியிட்ட விமர்சனக் கட்டுரை, இதைச் சுட்டிக்காட்டியது.
மனித உரிமை என்ற பெயரில், திபெத் சுதந்திரம் தான், தாலாய்லாமா குழுவின் உண்மையான நோக்கமாகும். அவர்களின் சூழ்ச்சி நனவாகினால், திபெத் மக்கள் ஒரு மனித உரிமை தீமையை எதிர்நோக்குவர். ஆனால் வரலாற்றின் முன்னேற்ற சக்கரம், ஒரு சிலருக்காக பின்நோக்கி செல்லாது என்று இந்தக் கட்டுரை கூறியது.
|