• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-27 10:33:10    
செய்தி அறிவிப்பில் பங்கெடுத்த இந்திய செய்தியாளர்கள்(அ)

cri
கலை....... அன்பான நேயர்களே வணக்கம். இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்........அன்பான நண்பர்களே வணக்கம். மார்ச் திங்கள் 3ம் நாள் முதல் 18ம் நாள் வரை சீனாவின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய இரு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன.

கலை....... அவற்றின் பெயர்களை குறிப்பிடலாமே.

தமிழன்பன்........ஆமாம். 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத் தொடர் இவ்விரண்டும் கூட்டத் தொடர்களாகும். அப்படித்தானே.

கலை.......சரியாக குறிப்பிட்டீர்கள். கூட்டத் தொடர்கள் பற்றிய செய்திகள் மற்றும் செய்தித் தொகுப்புகள் ஒலிபரப்பப்படட பின் கருத்துக்களை தெரிவிப்பதில் பல நேயர்கள் உற்சாகமாக பங்கெடுத்துள்ளனர்.

தமிழன்பன்........குறைந்தது 20 நேயர்கள் பங்கு கொண்டனர் என்று துணிவுடன் எண்ணிக்கை படி கூறிவிடலாம்.

கலை.......நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான்.

தமிழன்பன்........ஆகவே இங்கே கருத்து பதிவு பெற வாய்ப்பு பெற்றவர்களுக்கும் கூட்டத் தொடர்களை கேட்பதில் அதிக அக்கறை காட்டிய அனைத்து நேயர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றோம்.

கலை.......நல்லது. கூட்டத் தொடர்கள் பற்றி வெளிநாட்டு செய்தியாளர்கள் கூட்டத்தில் எங்கள் இந்திய செய்தியாளர்களும் பங்கு கொண்டுள்ளனர்.

தமிழன்பன்........அவர்கள் யார்?

கலை.......பெய்ஜிங்கிலுள்ள தைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின்

சைப்பால் தாஸ்குப்தும் பிரஸ்ச்டிரஸ்ட் ஆவ் இந்தியா என்னும் செய்தி ஊடகத்தின் இராகவேந்திராவும் இந்த கூட்டத் தொடர்கள் பற்றி செய்தி அறிவித்த இந்திய செய்தியாளர்களாவர்.

தமிழன்பன்........ஆகவே இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் செய்தி அறிவிப்பிலான அவர்களின் அனுபவங்களை பார்க்கலாமே.

கலை.......நல்ல யோசனை.

தமிழன்பன்........ டைம்ஸ் ஆவ் இந்தியா நாளேட்டின் செய்தியாளராகிய சைப்பால் தாஸ்குப்து ஏற்கனவே சீனாவில் 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

கலை.......சீனத் தேசிய மக்கள் பேரவை சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு போன்ற கூட்டத் தொடர்கள் பற்றிய செய்தியறிவிப்பில் கலந்து கொள்வது அவருக்கு இது இரண்டு முறை.

தமிழன்பன்......அப்படியிருந்தால் இந்த முறை முக்கிய கூட்டத் தொடர்கள் பற்றிய செய்தியறிப்பில் அவருக்கு என்ன எண்ணம் இருக்கின்றது.

கலை........அது பற்றி அவருடைய கருத்தை கேளுங்கள்.

சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்கள் முன்பை விட மேலும் இளமையானவர்களாகவும் மேலும் பல்வேறு துறைகளில் அறிவு பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். அவர்களின் பொருளாதார நிலைமையும் முன்பை விட மேம்பட்டுள்ளது. இப்போது சீனாவின் செல்வாக்கு மேன்மேலும் வலிமையானதோடு இம்மாற்றம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அவர் கூறினார்.