• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-27 16:45:34    
சிறிய சீனா என்னும் நாட்டுப்புற பழக்கவழக்க கிராமம்

cri
தென் சீனாவிலுள்ள குவாங்துங் மாநிலத்தின் Shen zhen நகரம், சீனாவின் முதலாவது பொருளாதார சிறப்பு பிரதேசமாகும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனப்பொருளாதாரம் முழுமையாக வளர்ச்சியடைவதை, Shen zhenனின் வளர்ச்சி எடுத்துக்காட்டலாம். Shen zhenனில், சிறிய சீனா என்னும் புகழ்பெற்ற காட்சி இடத்தில், சீனாவின் பல்வேறு இயற்கைக் காட்சித் தலங்களும், புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களும் சுருக்க பதிப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டன. இன்று, இந்த நாட்டுப்புற பழக்கவழக்க கிராமத்தைப் பார்வையிட போகின்றோம்.

சிறிய சீனா என்னும் நாட்டுப்புற பழக்கவழக்க கிராமம், அழகான Shen zhen வளைகுடாவின் கரையில் அமைதுள்ளது. அதன் சுருக்க காட்சி பூங்கா, தற்போது உலகில் மிகப்பெரிய பரப்பு, மிக அதிகமான உள்ளடக்கம் கொண்ட உண்மை காட்சிகளுக்கான சிறிய வடிவ காட்சி மண்டலமாகும். அதன் பரப்பளப்பு, 3 லட்சம் சதுர மீட்டராகும். இதில், சீனாவின் தனிச்சிறப்பியல்பு மிக்க இயற்கைக் காட்சிகளும், வரலாற்று சிறப்பும் அழகும் வாய்ந்த காட்சித்தலங்களும் இடம்பெற்றுள்ளன.
சிறிய சீனா என்னும் புகழ்பெற்ற காட்சி இடத்தில், பெரும்சுவர், Qin shihuang என்னும் பேரரசரின் கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட சுடுமட்பாண்ட போர்வீரர் உருவச்சிலைகள், சீனாவில் மிக பழைய கல் பாலம், மர கோபுரம், அரண் மனை

அருங்காட்சியகம், கன்பிஃயூசியஸ் கோயில், கம்பீரமான Tai shan மலை, மூமலை பள்ளத்தாக்கு, பல்வேறு தேசிய இன நடையுடை பாவனைகள் வாய்ந்த உள்ளூர் மக்கள் குடியிருப்பிடங்கள் முதலியவை, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு காட்சி இடங்களுக்கிடையில், பீங்கானில் செய்யப்பட்ட சுமார் 50 ஆயிரம் சிறிய மனிதர் மற்றும் விலங்கு மாதிரிகள் உள்ளன. சீனாவில் பல்வேறு தேசிய இனங்களின் வாழ்க்கை பழக்கவழக்கங்களை, இவை பிரதிபலிக்கின்றன. அதே வேளை, மலர் உலகம், பச்சை உலகம், அழகான உலகம் என்பதை இலக்காக கொண்டு, இக்காட்சி மண்டலம், சீனாவின் பாரம்பரிய காட்சி கலையையும், நவீன பூங்கா கலையையும் செவ்வனே இணைத்து, சீனப்பூங்கா கலையின் முன்மாதிரியாக மாறியுள்ளது.

சிறிய வடிவ காட்சிகளைத் தவிர, சீனாவின் பாரம்பரிய பண்பாட்டைப் பிரச்சாரம் செய்யும் பொருட்டு, இந்த நாட்டுப்புற பழக்கவழக்க கிராமத்தில் சீன நாட்டுப்புற பழக்கவழக்க பண்பாட்டுப் பிரதேசம் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பொறுப்பாளர் WANG DAN SHENG கூறியதாவது:
இந்த காட்சி மண்டலத்தின் தனிச்சிறப்பியல்பும், பண்பாட்டு குறிப்பும் மிகவும் தெளிவாக உள்ளன. குறிப்பிட்ட செயல்பாடுகளில், சீனாவின் பாரம்பரிய பண்பாட்டையும், பல்வேறு தேசிய இனங்களின் பழக்கவழக்கங்களையும் திரட்டி அழகூட்டி, தற்போதைய மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய தேவைகளுடன் நெருக்கமாக இணைக்கப்படுகின்றன. பண்பாட்டு தனிச்சிறப்பியல்பு கொண்டு, பல்வேறு துறைகளின் தேவையை மனநிறைவு செய்யும் சுற்றுலா உற்பத்தி பொருட்களாக இதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சிறிய சீனா என்னும் நாட்டுப்புற பழக்கவழக்க கிராமம், சீனாவில், பல்வேறு தேசிய இனங்களின் நாட்டுப்புற கலைகள் நடையுடைய பாவனைகள், மக்கள் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை ஒரே பூங்காவில் இணைத்து சேர்க்கும் பெரிய ரக பண்பாட்டு சுற்றுலா காட்சி மண்டலமாகும். இதில், 22 சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த 25 கிராமங்கள் உள்ளன. நடையுடைய பாவனை நிகழ்ச்சி, நாட்டுப்புற கைவினை கலைப்பொருட்காட்சி, நாட்டுப்புற விழா கொண்டாட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், சீன தேசிய இன கோயில் திருவிழா, நீர் தெளிப்பு விழா, தீப விழா, உள்மங்கோலிய பாவனை வாரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில், வெவ்வேறான கோணத்திலிருந்து சீனாவின் பல்வேறு தேசிய இனங்களின் பண்பாடு காட்சிக்கு வைக்கப்படுகிறது. WANG DAN SHENG அறிமுகப்படுத்தி கூறியதாவது: