பல்வேறு நாடுகளின் விருந்தினர்களை வரவேற்கின்றோம்
cri
அழைப்பின் பேரில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் பல்வேறு நாடுகளின் விருந்தினர்களை சீன மகிழ்ச்சியாக வரவேற்று, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தொடர்புடைய விதிகளின் படி அவர்களை உபசரிக்கும். இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சின் காங் இவ்வாறு கூறினார். ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலைவர் அழைப்பை ஏற்று துவக்க விழாவில் கலந்து கொள்வதா இல்லையா என்பது பற்றி கூறியது அவர் தனது நாட்டின் ஒலிம்பிக் கமிட்டிக்கு அளித்த பதிலாகும். இது குறித்து சீனத் தரப்பு மதிப்பிட விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
|
|