நேற்று, 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபத்தொடரோட்டத்தின் முன்றாவது நாள் நடவடிக்கை, தடையின்றி முடிவடைந்தது.
உள்ளூர் நேரப்படி, காலை 9மணிக்கு, புனிதத் தீபம், கிரேக்கத்தின் மத்திய பகுதியிலுள்ள Janina நகரிலிருந்து வடகிழக்கு திசைநோக்கி சென்றது. Metsovo, Grebena முதலிய கிரேக்க நகரங்களை கடந்த பின், இறுதியில் மாலை 5:35 மணிக்கு Veria நகரை அடைந்தது. இப்போக்கில், Metsovo நகருக்க அருகிலுள்ள பனிமலையை இத்தீபம் வெற்றிகரமாக தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் புனிதத் தீபம், மேற்கூறிய நகர மக்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டது.
|