திபெத் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தின் மூலம், சீன மக்கள், மேலை நாடுகளின் சில செய்தி ஊடகங்களின் உண்மை தோற்றத்தை தெரிந்துகொண்டனர்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Qin Gang இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.தற்போது, திபெத் வன்முறைச் சம்பவம் பற்றி, வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் உண்மையில்லாத செய்திகளை வெளியிடுவது பற்றி குற்றச்சாட்டு பதிவு செய்வது பற்றிய அரசு சாரா இணைய தளம், சீனாவில் இருக்கிறது. இது பற்றி, Qin Gang பேசுகையில், மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் பணி ஒழுக்க நெறியை அத்துமீறியதற்காக சீன மக்கள் சுயவிருப்பத்துடன் வெளிப்படுத்திய கண்டன வழிமுறை, இந்த இணைய தளமாகும் என்று கூறினார்.
|