• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-27 17:52:59    
லாசாவிலான மார்ச் 14 வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம்

cri
மார்ச் திங்கள் 14ம் நாள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள் நிகழ்ந்தன. மதப்பிரமுகர்கள், நகரவாசிகள், அறிவாளர்கள் முதலிய சமூகத்தின் பல்வேறு வட்டாரங்கள் இவ்வன்முறைச் சம்பவங்களுக்கு வண்மையான கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் பங்கேற்ற வன்முறையாளர்களின் செயல்கள் மனித நேய எழுச்சியை மீறி, லாசாவிலான அதிக முயற்சி மூலம் பெற்ற முன்னேற்றங்களைச் சீர்குலைத்துள்ளன என்று பொதுவாக கருதப்படுகிறது. அதே வேளையில், இவ்வன்முறைச்செயல்கள் போன்ற சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது. மக்களின் அமைதியான வாழ்க்கைச் சூழல் மீட்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அன்று, சில துறவிகள் லாசாவின் Ramoche கோயிலுக்கு அருகில் பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர்களை கல்லால் தாக்கினர். அடுத்து, சில வன்முறையாளர்கள் சாலையில் திரண்டு, நாட்டை பிளவுப்படுத்தும் வாசகங்களை முழங்கி, பல்வகை வன்செயல்களை மேற்கொண்டனர். நிலைமை விரைவில் மோசமாகியது. லாசா நகரின் முக்கிய சாலைகளிலுள்ள கடைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வங்கிகள், மின்னாற்றல் மற்றும் செய்தித் தொடர்பு வசதிகள், செய்தி ஊடகங்கள், அரசு வாரியங்கள் முதலியவற்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து, வாகனங்களை தீக்கிரையாக்கி, அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்தினர். உள்ளுர் மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.

சில துறவிகள் மத விதிகளை மீறி, மதத் துறை மற்றும் பரந்த பொது மக்களின் அடிப்படை நலன்களைச் சீர்குலைத்தனர் என்று சீன மதச் சங்கத்தின் திபெத் கிளை பிரிவின் தலைவர் தருகாங் துபுடென் ஹெதருப் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது

சில துறவிகளின் செயல்கள் முழுமையாக மத எழுச்சியை மீறி, புத்த மதத்தின் விதிகளுக்கு பொருத்தமற்றவையாக இருந்தன. துறவியாக, நாங்கள் மத ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்த வேண்டும். திபெத் மக்களின் வாழ்க்கை மற்றும் புத்த மத பண்பாட்டின் செழுமையை கடுமையாக பாதிப்பதால், அரசு சட்டப்படி இவ்வன்முறைச்செயல்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

புள்ளிவிபரங்களின் படி, இச்சம்பவங்களில் 18அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். தீயால் நாசமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் சீர்குலைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கை முறையே 120 மற்றும் 908யை எட்டியது. தவிர, 7 பள்ளிகளும் 5 மருத்துவமனைகளும் சீர்குலைக்கப்பட்டன. நேரடி பொருளாதார இழப்பு சுமார் 25கோடி யுவானாகும்.

லாசாவின் நகரவாசி லோசாங் என்பவர் கடும் கோபத்துடன் கூறியதாவது

கடந்த சில நாட்களாக, சில வன்முறையாளர்களின் செயல்கள் குறித்து, கடும் ஆத்திரம் அடைந்தேன். திபெத்தின் தற்போதைய செழுமை மற்றும் நிதானம் கொண்ட நிலைமை, பல்வேறு தேசிய இன மக்களின் கூட்டு முயற்சிகளின் பலனாகும். இது ஒன்றும் தானதல்ல. ஆனால், இது சில நாட்களில் வன்முறையாளர்களால் சீர்குலைக்கப்பட்டு, மாபெரும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலாய் லாமா குழுவின் சூழ்ச்சி கைகூட, நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வன்முறைச்செயல்களை கண்ட Chodrek என்ற முதியவர் கூறியதாவது

லாசாவிலான சமூக ஒழுங்கு மற்றும் நிதானத்தை இச்செயல்கள் கடுமையாக சீர்குலைத்தன. மக்களுக்கு அமைதியான சமூகச் சுற்றுச்சூழலை மீண்டும் உருவாக்கித்தரும் வகையில், அரசு கூடிய விரைவில் குற்றவாளிஇகள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக அவர் கூறினார்.

நீண்டகாலமாக மதப் பிரச்சினை பற்றி ஆராய்ந்து வரும் சீன திபெத்தியல் ஆராய்ச்சித் துறையின் அறிஞர்Dukar Tsering கூறியதாவது

திபெத் மரபுவழி புதத மதம் இயல்பான ஒழுங்கு, திபெத் தேசிய இனத்தின் பாரம்பரிய பண்பாட்டின் மீட்பு ஆகியவற்றுக்கு, தலாய் லாமா குழு மிகப் பெரிய சீர்குலைவு மற்றும் தடையாக இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

லாசாவிலான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த பின், தன்னாட்சி பிரதேச அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சட்டப்படி வன்செயல்களுக்கு தண்டனை விதித்துள்ளது. தற்போது, லாசாவிலான கடைகள், புள்ளிகள்,பேரங்காடிகள் ஆகியவை இயல்பாக செயல்படத் துவங்கியுள்ளன. இந்நகரில், வழக்கம் போல் அமைதி நிலைமை மீட்கப்பட்டுள்ளது.