நாட்டு ஒன்றிணைப்பையும் சமூக நிதானத்தையும் பேணிக்காக்க, சீன அரசு மற்றும் மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு என்று பாகிஸ்தானின் புதிய தேசிய பேரவையின் தலைவர் fahmida mirza அம்மையார் நேற்று ஆதரவு தெரிவித்தார். பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதர் luo zhaohuiஐ சந்தித்துப்பேசிய போது, அவர் இவ்வாறு கூறினார். அண்மையில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களைப் பாகிஸ்தான் தேசிய பேரவை வன்மையாகக் கண்டித்தது. திபெத் மற்றும் தைவானின் சுதந்திரத்தைப் பாகிஸ்தான் எதிர்க்கின்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியல் மயமாக்கும் வெளிநாட்டுச் சக்தியின் சூழ்ச்சியைப் பாகிஸ்தான் எதிர்க்கின்றது என்று fahmida mirza அம்மையார் கூறினார்.
பாகிஸ்தான் அரசு மற்றும் மக்கள், திபெத் மற்றும் தைவான் பிரச்சினைகளில் சீனாவுக்கு எப்போதும் ஆதரவு தெரிவிப்பதற்கு luo zhaohui நன்றி தெரிவித்தார்.
|