நாட்டு ஒன்றிணைப்பையும் சமூக நிதானத்தையும் பேணிக்காக்க, சீன அரசு மற்றும் மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தானின் புதிய தேசிய பேரவையின் தலைவர் fahmida mirza அம்மையார் நேற்று ஆதரவு தெரிவித்தார். அண்மையில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களைப் பாகிஸ்தான் தேசிய பேரவை வன்மையாகக் கண்டித்தது. திபெத் மற்றும் தைவானின் சுதந்திரத்தைப் பாகிஸ்தான் எதிர்க்கின்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியல் மயமாக்கும் வெளிநாட்டுச் சக்தியின் சூழ்ச்சியைப் பாகிஸ்தான் எதிர்க்கின்றது என்று fahmida mirza அம்மையார் கூறினார். அண்மையில், திபெத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய சில மேலை நாட்டு செய்தி ஊடகங்களின் உண்மையில்லாத செய்திகள் குறித்து, சீன வானொலி நிலையத்தின் ஜெர்மன் மொழி நேயர்கள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவோர் பேராத்திரம் தெரிவித்தனர். அரை நூற்றாண்டாக, திபெத்தின் வரலாற்று உண்மையை எடுத்துக்கூறுவதன் மூலம், தாய்நாட்டைப் பிளவுப்படுத்தி, சீனாவை எதிர்க்கும் சக்திகளுக்குச் சேவை செய்யும் தலாய்லாமா குழுவின் சாராம்சத்தை நமது யுகம் என்னும் ஜெர்மன் வார இதழ் வெளிப்படுத்தியது. தவிர, ரஷியா, ஆஸ்திரேலியா, கத்தார், Bosnia-Herzegovinia முதலிய நாடுகளின் விளையாட்டு மற்றும் அரசியல் துறையினர்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் புறக்கணிப்பதை எதிர்க்கின்றனர்.
|