14ம் நூற்றாண்டின் பிற்பாதியில், துங்சியா என்ற இடத்தில் கூடி வாழ்கின்ற பல தேசிய இனங்கள் ஒன்றிணைந்ததன் மூலம், துங்சியாங் இனம், உருவாகியது. அவர்களில் முக்கியமாக இஸ்லாம் மத நம்பிக்கை கொண்ட ஹூய் இன மக்களும், மங்கோலியர்களும் உள்ளனர். அவர்கள் gansu மாநிலத்தில் கூடி வாழ்வதோடு, பாதிக்கு மேலானோர் gansu மாநிலத்தின் துங்சியா இன தன்னாட்சி மாவட்டத்தில் வாழ்கின்றனர். அதன் மக்கள் தொகை, 3 இலட்சத்து 73 ஆயிரமாகும்.

துங்சியாங் இனத்திற்கு சொந்த மொழி உண்டு. ஆனால் எழுத்துக்கள் இல்லை. இதன் மொழி, ஆர்டிக் மொழி குடும்பத்தின் மங்கோலிய கிளையைச் சார்ந்தது. சீன மற்றும் tujue மொழிகளிலிருந்து அதிகமான சொற்கள் இம்மொழியில் பயன்படுத்தப்படுகின்றனர். துங்சியாங் இன மக்களால், சீன மொழியில் பேசவும் எழுதவும் முடியும். அவர்களுக்கு, பொது மக்கள் பொழுதுப்போக்கு நடவடிக்கைகளும் செவிவழி இலக்கியங்களும் அவர்களுக்கு உண்டு. குதிரை சவாரி போட்டி, மற்போர் முதலியவை அவர்களுக்கு பிடித்தமான போட்டிகளாகும்.

துங்சியாங் இன மக்கள், முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். கால்நடை வளர்ப்பு, குறிப்பாக, ஆடுகளை வளர்ப்பது, அவர்களின் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. சிங்கோ, பழங்கள், பேரீச்ச பழம் ஆகிய துங்சியாங்கின் மூன்று சிறப்பு மிக்க பழங்கள், சீனாவில் புகழ் பெற்றன.
துங்சியாங் இன மக்கள், பன்றி, நாய், குதிரை, கழுதை ஆகிய விலங்குகளின் இறைச்சிகளையும், வயோதிக காலத்தில் இறந்த விலங்குகளின் இறைச்சியையும் ரத்தத்தையும் சாப்பிட கூடாது. அழுக்கான பொருட்களை, சமாதிகள் மற்றும் மசூதிகளுக்குள் கொண்டு செல்ல கூடாது. உணவுப்பொருட்களைக் கொண்டு கேலி செய்ய கூடாது. இவை போன்ற கட்டுப்பாடான பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர்.

நாட்களில், gulongyijie என்ற விருந்து நடத்தப்படுகிறது. மாவு உணவுகளைச் சாப்பிடுவதாக இது பொருட்படுகின்றது. அவை பெரும்பாலும் பொரியல் உணவுவகைகளாகும்.
|