• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-28 08:26:29    
சிங்சியாங் உயிகூர் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் நிகழ்ச்சியில் துருபான் முகாமு கலைஞரின் புதிய வாழ்க்கை

cri
சிங்சியாங் உயிகூர் இனத்தின்முகாமு கலை, ஆடல் பாடல்களை ஒன்றுதிரட்டும் பன்நோக்கு கலை வடிவமாகும். இது, துருபான் பிரதேசத்தின் Shanshan மாவட்டத்தின் Lukeqinநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பிரதேசங்களின் நகரங்களிலும் மாவட்டங்களிலும் முக்கியமாகப் பரவலாகி வருகின்றது. இன்றைய நிகழ்ச்சியில், நாம், Lukeqinநகரிலான முகாமு பண்பாட்டை அறிய இருக்கின்றோம்.

யிலி.முஹமாதி, துருபான் முகாமு கலைஞர் ஆவார். ஆனால், குழந்தை பருவம் முதல் அவர் முகாமு கலையைக் கற்றுக்கொள்ளவில்லை. முகாமு கலைஞராக மாறும் முன்பு, அவர், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். தமது அக்கறையால், 1997ம் ஆண்டு, யிலி. முஹமாதி, தொழில்முறை முகாமு மாணவராக மாறினார். கடந்த 5 ஆண்டுகளில், அவர், முகாமு கலையை முற்றிலும் கற்றுத்தேர்ச்சி பெற்று புகழ்பெற்றார். 2004ம் ஆண்டு, அவர், உள்ளூர் பண்பாட்டு நிலையத்தில் பணி புரிய அனுப்பப்பட்டுள்ளார்.அன்று முதல், அவர், தொழில்முறை முகாமு கலைஞராக மாறியுள்ளார். அவர் கூறியதாவது

பண்பாட்டு நிலையத்துக்கு வந்த பிறகு, எனது நிலைமை நன்றாக இருக்கின்றது. நாள்தோறும் நான் முன்பு படித்தமுகாமு இசை வரியை எழுதி பயிற்சி செய்கின்றேன். தற்போது, நான் முகாமு கலை முழுவதையும் கற்றுத்தேர்ந்து விட்டேன் என்றார் அவர்.

குகாமுநியாச். கிவுர் என்னும் முகாமு நடனம் ஆடு பவருக்கு இவ்வாண்டு, 85வயது. அவர், யிலி. முஹமாதியின் சக ஊழியர்களில் ஒருவராவார். 12வயது முதல், ஆடல் கற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளஅவர், முகாமு நடனம் சிறப்பாக ஆடும் கலைஞர்களில் ஒருவர் ஆவார். முகாமு கலையை நேசிப்பதால், இத்துறையில் அவர், 73 ஆண்டுகளாக பணிந்து புரிந்து வருகின்றார். தற்போது, அவர், பண்பாட்டு நிலையத்தில் உள்ள மூத்த முகாமு கலைஞர்களில் ஒருவராக ஆவார். அவர் கூறியதாவது

தற்போது, எனது உடல் நன்றாக இருக்கின்றது. நடனம், ஆடுவது உடற்பயிற்சி செய்வது போல், உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் என்று முகாமு நியாச். கிவுர் கூறினார். 1999ம் ஆண்டு, முகாமு கலைஞர்களுக்கு இசைக்கருவிகளையும் கலை நிகழ்ச்சிக்கான ஆடைகளையும் வாங்க உள்ளூர் அரசு, பல பத்து ஆயிரம் யுவான் ஒதுக்கிவைத்தது. அதே வேளையில், துருபானில் முதலாவதுமுகாமுநூலையும் குறுந்தகட்டையும் வெளியிடுவதில் உள்ளூர் அரசு, 50 ஆயிரம் யுவான் ஒதுக்கீடு செய்துள்ளது. இவற்றில் இரு பதிப்புகள் அடங்கும். அவை, சீன மற்றும் உயிகூர் மொழிபதிப்புகளாகும். தற்போது, முகாமு கலைஞர்கள், கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான கட்டண தொகை, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட 50 விழுக்காடு அதிகமாகும். அவர் கூறியதாவது

முகாமு கலைஞர்களான நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம் . நாங்கள் முகாமு பாடுவதில் மேன்மேலும் ஆர்வம் கொள்கின்றோம்.முன்பு, மக்கள் சிலர், முகாமு கலை மீது வெறுப்புக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு இரவும் நாங்கள் முகாமுபாடினோம். அதற்குப் பணம் கொடுக்கப்படுவதில்லை. உள்ளூர் அரசு எங்களுக்கு உதவி தொகை வழங்கிய பின், நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அதனால்முகாமு கலையைக் கற்க வருகின்ற இளைஞர்கள் மேலும் அதிகமாகி வருகின்றனர் என்று யிலி.முகமாதி கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் திங்கள் சிங்சிங்யாங்கில் முதலாவதுமுகாமுபரப்பும் மையம், Shanshan மாவட்டத்தின் Lukeqinநகரில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களின் படி, 2007ம் ஆண்டு மட்டுமே, 3000க்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள், இங்கு வந்து பேட்டி கண்டுள்ளனர். செய்தித் தாள் முதல், வானொலி வரை, தொலைக்காட்சி முதல் இணையம் வரை, மேன்மேலும் அதிகமான மக்கள், இத் தனிச்சிறப்பு வாய்ந்த தேசிய கலையை அறிந்து கொண்டுள்ளனர். தற்போது, Tulufanமுகாமு கலைஞர்கள், Xinjiangஇலிருந்து வெளியேறுகின்றனர். 1992ம் ஆண்டு முதல், பெய்சிங், ஷாங்காய், சிங் காய் முதலிய இடங்களில்Tulufanமுகாமு கலைஞர்கள், 10க்கு மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளனர். 2000ம் ஆண்டு, முகாமுயின் மூத்த கலைஞர்கள் பிரிட்டனுக்குச் சென்று அரங்கேற்றினர். அவ்வேளையில், பிரிட்டன் ராணி அவர்களை வரவேற்றுரையாடினார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் முகாமுயின் கலையைக் கண்டு, இந்த நகரத்து பண்பாட்டு நிலையத்தின் இயக்குநரானYili Muhemaiti, இளம் முகாமு கலைஞர்களுக்கான பயிற்சியில் மேலும் கவனம் செலுத்துகின்றார். பள்ளியில், முகாமு கலையைப் பரவலாக்க முடியுமானால், இது, மேலும் நன்றாக இருக்கும். வாரத்துக்கு 2 முறை, முகாமு ஆசிரியார்கள், முகாமுநூல்களைக் கற்பித்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று முகமாதி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது

முகாமுகலையை உணர்வுபூர்வமாகக் கற்றுக்கொள்வது என்பது, அவர்களுக்கு நான் விடுத்த கோரிக்கையாகும் என்று Yili Muhemaiti கூறினார். தொழில் முறைமுகாமு கலைஞரான அவர், Tulufanமுகாமுகலைக்கு மரபுரிமைப் பெறத் திட்டமிட்டுள்ளார். மேலும் அதிக மானோர், இக்கலையை நேசிக்க வேண்டும். இக்கலையை மரபுரிமையாக அடைதலில் வளர்ச்சிகள் பெற வேண்டும் என்று செய்தியாளரிடம் Yili Muhemaiti கூறினார்.