• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-28 09:18:11    
தேசிய விளையாட்டரங்கு

cri
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேசிய விளையாட்டரங்கான பறவை கூடு உள்ளிட்ட திடல்கள் மற்றும் அரங்குகளின் பணிகள் சுமுகமாக நடைபெறுகின்றது. திட்டப்படி, இவ்வாண்டு ஏப்ரல் திங்களில், இது முமையாக கட்டிமுடிக்கப்படும். பெய்சிங் 2008ம் ஆண்டு திட்டப்பணி அலுவலகத்தின் துணைத் தலைவர் வாங் காங் இன்று இவ்வாறு தெரிவித்தார்.

கட்டியமைக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட 31 ஒலிம்பிக் திடல்களும் அரங்குகளும் மற்றும் 45 பயிற்சி திடல்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அனைத்து திடல்களிலும் அரங்குகளிலும் பறவை கூடு கடைசியாக கட்டிமுடிக்கப்படும் என்று வாங் காங் கூறினார்.
உலக வீரர்கள் அனைவரும் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதோடு, வெளையாட்டு பரிமாற்றங்கள் மூலம் புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டும் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் Yu Myung-huan 21ம் நாள் பெய்சிங்கில் விருப்பம் தெரிவித்தார்.

பெய்சிங் ஒலிம்பிக் திட்டப்பணிகளின் பொருட்காட்சி மையம், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேசிய விளையாட்டரங்கான பறவை கூடு, தேசிய நீச்சல் மையமான நீர் கன சதுரம் ஆகியவற்றை Yu Myung-huan 21ம் நாள் பார்வையிட்டார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதில் தென் கொரிய மக்கள் மாபெரும் உற்சாகம் காட்டுகின்றனர். பல இளைஞர்கள், பெய்சிங்கிற்கு வந்து ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள விரும்புகின்றனர் என்று அவர் கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் அளவு மற்றும் நிலை இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளையும் தாண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜோர்டான் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் குழுவின் தலைமைச் செயலாளர் Majed Al Qatarneh நேற்று, சீனா மேற்கொண்ட பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப்பணியைப் பாராட்டினார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதை ஜோர்டான் ஆதரித்து, இதைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற, சீனா பெரிதும் பாடுபட்டுள்ளது. அது மேற்கொண்டுள்ள ஆயத்தப்பணி, உலக மக்களின் கோரிக்கை

மற்றும் எதிர்பார்ப்பைத் தாண்டி, கண் கவரும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலை நாடுகளின் சில குழு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் புறக்கணிக்கும் முயற்சி குறித்து, அவர் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
விளையாட்டு எழுச்சி, நம்மை ஒரே குடும்பமாக இணைத்துள்ளது. இத்தகைய புறக்கணிப்பு மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள், விளையாட்டு எழுச்சிக்கு புறம்பானவை என்பதில் ஐயமில்லை என்றும் அவர் கூறினார்.