• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-28 09:24:08    
தேசியக் கமிட்டி உறுப்பினரான Cai Ling அம்மையார்

cri
சீன மக்கள் அரசியில் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசியக் கமிட்டி கூட்டத்தொடர் அண்மையில் பெய்சிங் மாநகரில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த சுமார் 2200 உறுப்பினர்கள் இக்கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, அரசியல் விவகாரங்கள் பற்றி விவாதித்தனர். Cai Ling அம்மையார் இவ்வுறுப்பினர்களில் ஒருவராவார்.
2003ஆம் ஆண்டு, 38 வயதான Cai Ling அம்மையார் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 10வது தேசியக் கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது வரை 5 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 5 ஆண்டுகளில், அவரின் பணி சில முறைகள் மாறியுள்ளது. முன்பு அவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணி புரிந்தார். பின்னர், Hu Bei மாநிலத்தின் விலைவாசி அலுவலகத்தின் துணைத் தலைவராக அவர் பதவி ஏற்றார். தற்போது, சீனத் தேசிய ஜனநாயகத் தேசிய கட்டுமான சங்கத்தின் மத்தியக் கமிட்டி ஆய்வு பிரிவின் துணைத் தலைவராக பதவி வகிக்கிறார். பணி மாறியுள்ள போதிலும், அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசியக் கமிட்டி உறுப்பினர் என்ற முறையில், அவர் தமது கடமையை எப்போதும் நினைவில் வைத்திருக்கின்றார்.
நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது, Cai Ling அம்மையார் கூட்டத்தொடரின் விவாதத்தில் நிகழ்த்திய உரையாகும். தாம் அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றி உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமாக விவாதித்தனர். முன்முயற்சியுடன், தமது கருத்தை தெரிவிக்கும் வாய்ப்பை Cai Ling அம்மையார் பெற்றார். அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பணிகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது பற்றி தமது கருத்துக்களை அவர் விவரித்தார்.

தற்போது, அரசியல் விவகாரங்கள் பற்றி விவாதிப்பதில் உறுப்பினர்கள் பேரெழுச்சி காட்டியுள்ளனர் என்றும், முன்முயற்சியுடன் செயல்படாவிட்டால், தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்க முடியாது என்றும் செய்தியாளருக்கு Cai Ling அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது:
"பழைய உறுப்பினர்களைத் தவிர, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அரசியல் விவகாரங்களில் பங்கெடுத்து, இவற்றை விவாதிப்பதில் பேரெழுச்சி காட்டியுள்ளனர். விவாதப் போக்கில், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த உறுப்பினர்கள், தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர். பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன" என்றார், அவர்.
அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், தமது கடமையை செவ்வனே நிறைவேற்றும் பொருட்டு, மிகப் பல மக்களின் அடிப்படை நலனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி Cai Ling அம்மையார் விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்துள்ளார். அவர் கூறியதாவது:
"அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசியக் கமிட்டி உறுப்பினராக, கூட்டத்தொடரில் அரசியல் விவகாரங்கள் பற்றி விவாதிக்க வேண்டும். அதற்கு முன் சீனாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஒட்டுமொத்த நிலைமை, பொது மக்களும் அரசும் கவனம் செலுத்தும் முக்கிய பிரச்சினைகள் முதலியவை பற்றி பன்முகங்களிலும் அறிந்து கொள்ள வேண்டும்"என்றார், அவர்.

இதனால், கடந்த 5 ஆண்டுகளில், Cai Ling அம்மையார், கிராமப்புறங்கள், தொழில் நிறுவனங்கள், குடிமக்களின் வீடுகள் ஆகியவற்றுக்கு சென்று, பொது மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் உணர்வுப்பூர்வமாக கேட்டறிந்தார். இந்த கருத்துக்கள் மற்றும் யோசனைகளுக்கிணங்க, அவர் தமது கருத்துருக்களை வகுத்தார். கடந்த 5 ஆண்டுகளில், 20க்கு அதிகமான கருத்துருக்களை முன்வைத்தார். இடம்பெயர்ந்து பணி புரியும் விவசாயிகள், வேளாண் தொழில் வரியை காலதாமதமின்றி வழங்காமை என்ற பிரச்சினையை உரிய முறையில் கையாள்வது, வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை மீண்டும் வழங்குவது, குடியிருப்பு வீடுகளின் விலையை நிதானப்படுத்துவது ஆகியவற்றுடன் இக்கருத்துருக்கள் தொடர்புடையவை.
கடந்த சில ஆண்டுகளில், சமூகத்தின் பல்வேறு துறையினர்களின் கூட்டு முயற்சியுடன், அவர் முன்வைத்த பிரச்சினைகள் பெரிதும் மேம்பட்டுள்ளன என்று அவர் செய்தியாளரிடம் மகிழ்ச்சியாக கூறினார். அவர் கூறியதாவது:
"நான் முன்வைத்த பெரும்பாலான கருத்துருக்களுக்கு தொடர்புடைய வாரியங்கள் நல்ல பதில் அளித்துள்ளன. நான் மனநிறைவு அடைகின்றேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, தீர்க்கப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்த பல்வேறு துறைகளிலான பிரச்சினைகள் பெருமளவில் மேம்பட்டுள்ளன"என்றார், அவர்.
அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் புதிய தேசிய கமிட்டி உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், பொருட்களின் விலையேற்றத்தில் அவர் கவனம் செலுத்த துவங்கினார். இவ்வாண்டு அவர் முன்வைத்த 4 கருத்துருக்கள் விலைவாசியுடன் தொடர்புடையவை. இவற்றில் பொருட்களின் விலையை நிதானப்படுத்துவது, விலையைக் கட்டுப்படுத்தும் நியாயமற்ற நடவடிக்கையைக் கண்டறிந்து கையாள்வது ஆகியவை அடங்கும். அவர் கூறியதாவது:
"இவ்வாண்டு பொருட்களின் விலை உயர்ந்த நிலையில் இருக்கிறது. சாதாரண நாட்களில், காய்கறிகளையும், மற்ற பொருட்களையும் வாங்குகின்றேன். இந்த வாய்ப்பைக் கொண்டு, அடி மட்டத்தில் உள்ள மக்களுடன் உரையாடுகின்றேன். இதன் மூலம் அடிப்படை தகவல்களை பெற முடியும். எனது பொறுப்பு உணர்ச்சியை வலுப்படுத்த இது துணை புரியும். அரசின் தொடர்புடைய வாரியங்கள் இப்பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன்"என்றார், அவர்.
பொது மக்களின் வாழ்க்கை மீதான அவரின் கவனத்துக்கு பொது மக்கள் மறுமொழி அளித்துள்ளனர். சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டி கூட்டத்தொடர்களில் பொது மக்கள் மென்மெலும் கவனம் செலுத்தியுள்ளனர். உறுப்பினர்களின் கடமை மேலும் அதிகரித்துள்ளது என்று Cai Ling கூறினார். அவர் கூறியதாவது:

"உறுப்பினர்கள் மூலம் தத்தமது விருப்பத்தை கூட்டத்தொடர்களில் தெரிவிக்க வேண்டும் என்று பொது மக்கள் பலர் விரும்புகின்றனர். கூட்டத்தொடர்கள் துவங்கியதற்கு முன், 80 வயதான முதியோர் ஒருவர் எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வீட்டுப்பதிவு சீர்திருத்தம் பற்றிய யோசனையை முன்வைத்தார். கூட்டத்தொடர்கள் மீதான பொது மக்களின் எதிர்பார்ப்பை இது வெளிப்படுத்துகிறது. சீனாவின் ஜனநாயக அரசியலை இது காட்டுகிறது" என்றார், அவர்.
கடந்த 14ஆம் நாள், அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசியக் கமிட்டி கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. புதிய தேசியக் கமிட்டி உறுப்பினராக, Cai Ling அம்மையார் கடமையை நிறைவேற்றுவதற்கான பணி சற்று முன் துவங்கியுள்ளது. அவர் கூறியதாவது:
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் பொறுத்த வரை, ஆண்டுதோறும் கூட்டத்தொடர் நடைபெறும் பத்துக்கு மேலான நாட்களில், கடமையை நிறைவேற்றுவது மட்டும் போதுமானதாக இல்லை. 365 நாட்களில், தத்தமது கடமையை நிறைவேற்ற வேண்டும். சாதாரண நாட்களில், பொது மக்களின் விருப்பம், முக்கிய சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் முதலியவற்றை, கருத்துரு என்ற வடிவத்தில், அரசுக்கும், கொள்கை தீர்மான வாரியங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்" என்றார், அவர்.