லாசா சுற்றுலா தொழில் மீதான பாதிப்பு
cri
அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற "3.14"வன்செயல்கள், லாசா சுற்றுலா தொழிலைப் பாதித்தாலும், அது குறுகிய பாதிப்பாகும். 27ம் நாள் வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசாவின் மேயர் Dorje Tseju இவ்வாறு கூறினார். லாசா சுற்றுலா தொழில் இயல்பான நிலைக்குக் கூடிய விரைவில் திரும்புமாறு, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிடம் இச்சம்பவத்தின் உண்மையை அரசு முதலில் விவரித்து, லாசாக்குச் சுற்று பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும். அத்துடன், காட்சி தலம், உணவகம் மற்றும் சரக்கு போக்குவரத்தின் பாதுகாப்பு பணியைத் தொடர்ந்து வலுப்படுத்தி, பயணிகளின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்யும் என்று அவர் கூறினார். தற்போது, லாசாயின் பல்வேறு துறைகளிலான ஒழுங்கு படிப்படியயாய் மீட்கப்படுகிறது.
|
|