கடை உரிமையாளர்களின் இழப்புக்கு நட்டஈட்டை அளிப்பது
cri
3.14 சம்பவத்தில் இழப்பு ஏற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நட்டஈடு அளிக்குமாறு, வரிவசூலிப்பு குறைவு மற்றும் விலக்கு முதலிய சலுகைகளை திபெத் வெளியிடும். 27ம் நாள் வெளிநாட்டு செய்தியாளர்களைப் பேட்டி கண்ட போது, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் துணை தலைவர் Padma Tsinle இவ்வாறு கூறினார். இழப்பு ஏற்படப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு, குறிப்பிட்ட காலம் வரை வட்டியின்றி அல்லது அரசு வட்டியை கொடுப்பதுடன் கூடிய கடன்களைக் வழங்குவது முதலிய சலுகையை திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தொழில்துறை மற்றும் வணிக ஆணையம் மேற்கொள்ளும். இதன் மூலம், 3.14 சம்பவத்தில் இழப்பு ஏற்பட்ட கடை உரிமையாளர்கள் கூடிய விரைவில் தங்கள் உற்பத்தி மற்றும் வாழ்க்கையை மீட்டெடுப்பார்கள் என்று இந்த ஆணையத்தின் தலைவர் Duanxiangzheng கூறினார். இச்சம்பவத்தில், 908 கடைகளும் 120 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டு, சீர்குலைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|