அண்மையில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் நடைபெற்ற அடிதடி, சீர்க்குலைத்தல், கொள்ளையடித்தல் தீயால் நாசப்படுத்தல் போன்ற வன் செயல்களை அறிவித்த போது சில மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் பொய் செய்திகளை அறிவித்தமை குறித்து தாய்லாந்தில் சீன மொழியில் வெளியிடப்படும் ஆசியா நாளேட்டின் துணை இயக்குனரும் தலைமை எழுதாளருமான சீனப் பிரச்சினை பற்றிய நிபுணர் சியென் போஃன் நமது செய்தியாளரிடம் நேர்காணல் அளித்தார். இந்த செய்தி ஊடகங்களுக்கு செய்தி அறிவிப்பு தொழிலுக்கு உகந்த ஒழுக்க நெறி இல்லை என்று கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது.
செய்தி அறிவிக்கும் போது செய்தியின் உண்மையை திரித்துக் கூறக் கூடாது. அதிலுள்ள உண்மையை நீக்க கூடாது. நேபாளத்தில் ஆட்பாட்டம் நடத்தியவர்களை விரட்டிய நேபாள காவற்துறையினரை திபெதில் சுதந்திரவாதிகளை கைது செய்யும் சீன காவற்துறையினராக அறிவிக்க கூடாது. நேபாளத்தில் நிகழ்ந்ததை. சீனாவின் திபெதில் நிகழ்ந்தது என்று அறிவித்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். லாசா விபத்து முழுவதும் வன் செயலாகும். இது அமைதியான ஆர்பாட்டம் இல்லை என்றார் அவர்.
தப்போது ஜெர்மனியில் சில செய்தி ஊடகங்கள் தாம் தவறாக செய்தி அறிவித்தமையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவர்கள் சீன அரசிடம் மன்னிப்பு தெரிவிக்க வில்லை. வருத்தம் மட்டும் தெரிவித்தன. இது செய்தி அறிவிப்புத் துறையில் ஈடுபடுவோரின் உண்மையான பாணிக்கும் ஒழுக்க நெறிக்கும் புறம்பானது. சர்வதேச ரீதியில் சில பகுதியினர் வேண்றுமேன்றே திபெத் பிரச்சினையை திரித்துக் கூறினர். மார்ச் 14ம் நாள் வன்முறை செயல்களை திபெத் இன மக்கள் அமைதியாக ஆர்பாட்டம் செய்த போது சீன அதிகார வட்டாரத்தால் ஆயுதத்துடன் அடக்கப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர். இது உண்மைக்கு முழுமையாக புறம்பானது என்று அவர் கூறினார்.
|