• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-28 12:17:19    
தொழில் ஒழுக்க நெறியற்ற செய்தி அறிவிப்பு முறை

cri

மார்ச் திங்கள் 14ம் நாள் சீனாவின் திபெத்திலும் அதற்கு அருகிலுள்ள இடங்களிலும் கலவரம் நிகழ்ந்தது. சில வன்முறையாளர்கள் அடிதடி, சீர்க்குலைத்தல், கொள்ளையடித்தல் தீயால் நாசப்படுத்தல் போன்ற வன் முறை நிகழ்வுகளை உண்டாக்கினர். இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றி தாய்லாந்திலுள்ள நமது செய்தியாளர் சான் துங் மேய் தாய்லாந்தில் சீனப் பிரச்சினை பற்றிய நிபுணர் சியென் போஃனை பேட்டி கண்டார்.
திரு சியென் போஃன் தாய்லாந்தில் சீன மொழியில் வெளியிடப்படும் ஆசியா நாளேட்டின் துணை இயக்குனரும் தலைமை எழுதாளரும் ஆவார். லாசாவில் கலவரம் நிகழ்ந்த பின் அதன் வளர்ச்சியை அவர் உற்று கவனித்துள்ளார். இது பற்றிய விபரங்களை மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் மற்றவரை விட முன்கூட்டியே அறிவித்தன. அவர் கூறியதாவது
 

செய்தி அறிவிக்கும் போது செய்தியின் உண்மையை திரித்துக் கூறக் கூடாது. அதிலுள்ள உண்மையை நீக்க கூடாது. நேபாளத்தில் ஆட்பாட்டம் நடத்தியவர்களை விரட்டிய நேபாள காவற்துறையினரை திபெதில் சுதந்திரவாதிகளை கைது செய்யும் சீன காவற்துறையினராக அறிவிக்க கூடாது. நேபாளத்தில் நிகழ்ந்ததை சீனாவின் திபெதில் நிகழ்ந்தது என்று அறிவித்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சியென் போஃன் உதாரணங்களை எடுத்து காட்டி பேசுகையில் சீன காவற்துறையினர் மக்களை கைது செய்ததாக மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் அறிவித்தன. அவை அறிவித்த காவற்துறையினர்கள் உண்மையாகவே வன்முறையால் காயமடைந்தவர்களை வண்டியில் ஏற்றி காபாற்றினார்கள். அவை அறிவித்த போது காட்டிய வண்டி காவற்துறை வண்டியல்ல. மாறாக அது அவசர மருத்துவ உதவி வண்டியாகும் என்று அவர் விமர்சனம் செய்தார். மேலை நாட்டு தொலைக் காட்சியில் மீண்டும் மீண்டும் காண்பிக்கப்பட்ட காயமுற்ற திபெத்தியர் சீன இராணுவ காவற்துறையினரால் அடிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. உண்மையில் இத்திபெத் இளைஞர் மருத்துவராவார். நோய்வாய்ப்பட்ட ஹென் இன சிறுவனை காபாற்றும் வகையில் அவர் வன்முறையாளரால் தலையில் தாக்கப்பட்டார். வன் முறை நடைபெற்ற போது சில மேலை நாட்டு பயணிகள் அவர்களின் புகைப்பட மற்றும் ஒளிப்படக் கருவிகளால் உண்மையான படங்களை எடுத்தனர். அவர்கள் தாங்களாகவே முன் வந்து கண்ட உண்மைகளை கூறியதும் சீன இராணுவ காவற்துறையினர் அமைதியாக ஆர்பாட்டம் செய்தவர்களை அடக்கினர் என மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் பிரச்சாரம் செய்ததும் முழுமையாக வேறுப்பாடானவை என்று அவர் கூறினார்.
தொடர்புடைய விளக்க திரைபடத்தின் மூலம் லாசா விபத்து முழுவதும் வன் செயலாகும். இது அமைதியான ஆர்பாட்டம் இல்லை என்றார் அவர்.
 

தற்போது ஜெர்மனியில் சில செய்தி ஊடகங்கள் தாம் தவறாக செய்தி அறிவித்ததை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவை சீன அரசிடம் மன்னிப்பு தெரிவிக்காமல் வருத்தம் மட்டும் தெரிவித்தன. இது செய்தி அறிவிப்புத் துறையில் ஈடுபடுவோரின் உண்மையான பாணிக்கும் ஒழுக்க நெறிக்கும் புறம்பானது. சர்வதேச ரீதியில் சில பகுதியினர் வேண்டுமேன்றே திபெத் பிரச்சினையை திரித்துக் கூறினர். மார்ச் 14ம் நாள் வன்முறை செயல்களை திபெத் இன மக்கள் அமைதியாக ஆர்பாட்டம் செய்த போது சீன அதிகார வட்டாரத்தால் ஆயுதங்களோடு அடக்கப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர். இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்று அவர் கூறினார்.
லாசா வன்முறையின் பின் விளைவு கடுமையானது. அதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது திபெத் தன்னாட்சி அரசு தேசிய பிரச்சினையை கையாளும் போது மிகவும் நுணுக்கமான மனபான்மை மேற்கொண்டுள்ளது. அப்போது சீனாவில் சீன தேசிய மக்கள் பேரவைக் கூட்டமும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடும் நடைபெற்று கொண்டிருந்தன. எதிர்பாராத இந்த வன்பமுறை நிகழ்ந்த போது லாசாவிலுள்ள பொறுப்பானர்களுக்கு வன்முறையாளர்களை கைது செய்ய துணிவு இல்லை. வன்முறையாளர்களை குறுகிய நேரத்தில் அடக்க முடிந்தது என்று மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் வர்ணித்தை போல் இருந்தால் விபத்தின் விளைவு இருந்திருக்காது என நம்புவதாக நிபுணர் சியென் போஃன் விமர்சனம் கூறினார்.