ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் ஜொமோ லுங்மா பகுதிக்கான வானிலை சேவை
cri
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் ஜொமோ லுங்மா சிகரத்தில் ஏறுவதற்கு வானிலை சேவை புரியும் வகையி்ல், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் ஜொமோ லுங்மா பகுதி வானிலை சேவை குழு லாசாவுக்குச் சென்றுள்ளது. இக்குழுவில் 20க்கும் அதிகமான வானிலை பணியாளர்கள் இடம்பெறுகின்றனர் என்று தெரிய வருகின்றது.
பீடபூமியில் வானிலையின் தீவிர மாற்றத்தினால், சிகர ஏற்றும் பிரதேசத்தில் காற்று பற்றிய முன்னறிவிப்பு ஒரு கடினமான கடமையாகும் என்று சீன வானிலை ஆணையத்தின் துணை தலைவர் xu xiao feng கூறினார். பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் ஜொமோ லுங்மா சிகரத்தில் வெற்றிகரமாக ஏறுவதற்கு வானிலை வாரியம் சிறப்பான சேவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
|
|