2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபத்தொடரோட்டத்தின் நான்காவது நாள் நடவடிக்கை, நேற்று தடையின்றி முடிவடைந்தது.

உள்ளூர் நேரப்படி, காலை 9:30 மணிக்கு, புனிதத் தீபம், கிரேக்கத்தின் வட பகுதியிலுள்ள Veria நகரிலிருந்து வடகிழக்கு திசைநோக்கி சென்றது. Naoussa, Skidra, Edessa முதலிய 7 நகரங்களை கடந்த பின், இரவு 7:24 மணிக்கு இறுதியில் Thessaloniki நகரை அடைந்தது.

Thessaloniki நகர், கிரேக்கத்தின் வட பகுதியிலுள்ள மிகப்பெரிய துறைமுக நகரும், கிரேக்கத்தின் 2வது பெரிய நகரும் ஆகும். நேற்று தீபத்தை வரவேற்கும் விழா பெறிய அளவில், இந்நகரில் நடைபெற்றது.
மார்ச் 30ம் நாள், புனிதத் தீபத்தொடரோட்டம், Athens நகரை அடையும். அங்கே, ஒப்படைப்பு விழாநடத்தப்பட்டு, புனிதத் தீபம் பெய்சிங்கிற்கு வழங்கப்படும்.
|