2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சில நாடுகளின் தலைவர்களின் எதிர்ப்பால் பாதிக்கப்பட்டால், மிகக் கடுமையாக பாதிக்கப்படுவோர் விளையாட்டுவீரர்கள ஆவர்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயர் அதிகாரியும் ஹங்கேரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவருமான பால் ஷிமிட் இன்று தென்கொரிய இன்ச்சானில் தென்கொரியச் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுவீரர்களுக்கு, துவக்க விழா முக்கியமானதாகும். உலகின் 205நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள், மிகச் சிறந்த கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து இந்த துவக்க விழாவில் கலந்துக் கொள்வது என்பது உலகின் அமைதிக்கு ஆற்றும் பங்காகும் என்று ஷிமிட் குறிப்பிட்டார்.
|