லாசாவிலான மார்ச் 14ம் நாள் நிகழ்ந்த வன்முறைச் செயல்களில் உயிரிழந்த 18 அப்பாவி பொது மக்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு ஆறுதல் நிதியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு நேற்று வெளியிட்ட அறிவிக்கை கூறியது. அவ்வறிக்கையின் படி, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2இலட்சம் யுவான் வழங்கப்படும் என்று தெரிய வருகிறது.

இவ்வன்முறை சம்பவங்களில் காயமற்ற அப்பாவி மக்கள், பாதிக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் செப்பனிடுதல் ஆகியவற்றுக்கு, திபெத் தன்னாட்சி பிரதேச அரசு உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று அறிக்கை கூறியது.
இவ்வன்முறைச் செயல்கள் ஏற்படுத்திய நேரடி பொருளாதார இழப்பு 25கோடி யுவானை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
|