
லாசாவிலான மார்ச் 14ம் நாள் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு உதவி அளிக்கும் வகையில், அரசு பல முன்னுரிமை கொள்கைகளை மேற்கொள்ளும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் நிதி ஆணையம் உள்ளிட்ட பல வாரியங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை கூறியது.
2 ஆண்டு கால வரி வருமானத்துக்கான முன்னுரிமை கொள்கை அவற்றில் இடம்பெறுகிறது. பாதிக்கப்பட்ட கடைகளுக்கு, இக்கொள்கையின் விதிகளின் படி, தொழில் வரி, தொழில் நிறுவன வருமான வரி, தனியார் வருமான வரி ஆகியவை விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
|