புதிய புள்ளி விபரங்களின் படி, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் உற்பத்தி மதிப்பு மூவாயிரத்து 420 கோடி யுவானை தாண்டியுள்ளது. நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 12 ஆயிரம் யுவானை விட மேலானது. கடந்த 7 ஆண்டுகளில், திபெத் பொருளாதாரம் 12 விழுகாட்டு வேகத்தில், தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில், திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்கான ஆதரவுகளை நடுவண் அரசு அதிகரித்தது. 2006ம் ஆண்டில், திபெத் வளர்ச்சியை விரைவுபடுத்தி, அதன் நிதானத்தை பேணிகாக்கும் வகையில் அரசவை 40 சலுகைகளை வகுத்தது. கடந்த ஆண்டில், திபெதின் 180 திட்டப்பணிகளுக்கு 7 ஆயிரத்து 700 கோடி யுவானை ஒதுக்கீடு செய்தது.
இவ்வாண்டில், 77 முக்கிய திட்டப்பணிகளுக்கு 2000 கோடி யுவானை திபெத் அரசு ஒதுக்கீடு செய்யும். 20 திட்டப்பணிகள் ஏற்கொண்டு தொடங்கியுள்ளன என்று திபெத் தன்னாட்சி பிரதேச அரசின் தொடர்புடைய வாரியங்கள் தெரிவித்தன.
|