சீன சமூக அறிவியல் கழக ஆய்வாளர் xia chun tao, தேசிய இன பிரச்சினை நிபுணர் zha luo, ஆகியோர், நேற்று சீன பொருளாதார நாளேட்டின் செய்தியாளருக்கு பேட்டி அளித்தனர். இப்பேட்டியின் போது, திபெத் மக்கள் வாழ்க்கையிலான மாற்றங்கள், மிகவும் தெளிவானது என குறிப்பிட்டு உள்ளனர்.
அண்மையில், லாசா நகரில் நிகழ்ந்த வன்செயல்களை பற்றி சில மேலை நாட்டு செய்தி நிறுவனங்கள் உண்மைகளை திரித்து வெளியிட்டன என்று xia chun tao தெரிவித்தார்.
திபெத் தன்னாட்சி பிரதேசம் விடுதலை பெற்ற 50 ஆண்டுகளுக்கு பின், நடுவண் அரசு, திபெத் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அதற்கு ஆதரவு அளித்தது. பொருளாதாரம், பண்பாடு, கல்வி, மருத்துவம், அறிவியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் திபெத் வளர்ச்சிக்கான சலுகைகளை நடுவண் அரசு வகுத்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில், திபெத் பொருளாதாரம் 12 விழுகாடு வேகத்தில், தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்று zha luo கூறினார்.
|