அண்மையில் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை நடவடிக்கைகளை தாலாய் லாமா குழு, தூண்டிவிட்டது என்று சீனாவின் மிக பெரிய சிங்குவாய் செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தது.
தாலாய் லாமா குழு தூண்டிவிட்டதால், இவ்வாண்டு மார்ச் திங்கள் 14ம் நாள் வன்முறையாளர்கள் சிலர் லாசா நகரில் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதே வேளையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளிலுள்ள சீன தூதரகங்களை நோக்கி, தாலாய் லாமா குழுவினர் பேரணிகள் சென்றனர் என்று இக்கட்டுரை தெரிவித்தது.
மார்ச் திங்கள் 14ம் நாள் வன்முறையாளர்கள் சிலர், லாசா நகரில் நடத்திய வன்முறை நடவடிக்கைகள், தாலெய் லாமா குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு, திட்டமிடப்பட்டு, தூண்டிவிடுக்கப்பட்டதற்கான பல உண்மைகள் வெளியிடுவதாக இக்கட்டுரை தெரிவித்தது.
|