லாசாவில் நிகழ்ந்த வன்செயல்களில், 12 பேரது உயிரிழப்புக்கு காரணமான தீச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள், கைது செய்யப்பட்டுள்ளனர் என்று லாசா நகரின் பொது பாதுகாப்பு துறையிலிருந்து கிடைத்த தகவல் கூறுகிறது.
இது வரை, லாசாவில் மார்ச் 14 நாள் நிகழ்ந்த அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களுடன் தொடர்புடைய 414 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், முதுகெலும்புகள் போன்ற 6 பேர் உள்ளிட்ட 289 பேர், தங்களது குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று லாசா பொது பாதுகாப்பு துறை கூறியது.
தற்போது, லாசாவின் நிலைமை, அமைதியாகவுள்ளது. சமூக ஒழுங்கு, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பொது மக்கள் மற்றும் பயணியர், உற்பத்தி, அன்றாட வாழ்க்கை மற்றும் சுற்றுலாவில் பதற்றமில்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த காவற்துறையினர் விரும்புவதாக லாசா நகரின் பொது பாதுகாப்புத் துறையின் துணைத் தலைவர் Jiang Zaiping கூறினார்.
|