• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-31 15:59:05    
பண்பாட்டுத் தொழில் துறை

cri

கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் zhangyimou இன் சில திரைப்படங்கள், உலகளவில் திரைப்படத்தை விரும்பும் மக்களால் வரவேற்கப்பட்டுகின்றன. எடுத்துக்காட்டக, 2002ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட வீரர் மற்றும் 2006ம் ஆண்டின் தங்க கவசம் அணிந்த படைவீரக்ள் முதலிய திரைப்படங்கள் இதில் அடங்கும். இத்திரைப்படங்களின் கம்பீரமான காட்சிகள் பல ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளன. அந்த காட்சிகள் எல்லாம் hengdian திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையத்தில் தயாரிக்கப்பட்டன.


hengdian திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையம், சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள zhejiang மாநிலத்தின் dongyang நகரத்தைச் சேர்ந்த hengdian சிறு நகரில் அமைந்துள்ளது. இதில் நுழைந்த உடன், மக்கள் வேறு ஓர் உலகத்தில் நுழைவதை போன்று உணர்வர். கம்பீரமான பண்டைக்கால அரண்மனைகள், தனிச்சிறப்பு வாய்ந்த சீன தென் பகுதியிலான தோட்டங்கள், 12ம் அல்லது 13ம் நூற்றாண்டின் சிறு நகர சந்தைகள், செழுமையான ஹாங்காங்கின் வீதிகள் ஆகியவை இம்மையத்தில் காணப்படுகின்றன. இங்கு நடகின்ற போது, பல யுகங்களை ஒரே நேரத்தில் கடப்பது போன்று உணர்வை மக்கள் பெறுகின்றனர்.


1996ம் ஆண்டு முதல், hengdian திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நகரத்திற்கு மொத்தம் 260 கோடி யுவான் ஒதுகீடு செய்யப்பட்டது. ஹாங்காங் வீதி, ming மற்றும் qing வம்சங்களின் அரண்மனைகள், qin வம்ச அரண்மனை, qing, mingshanghe ஓவியும், சீனாவின் தென் பகுதியின் நீர் வள ஊர்கள் உள்ளிட்ட 13 எழில் மிக்க செயற்கைக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சீனாவின் பல்வேறு வரலாற்று காலத்தின் தலைசிறந்த காட்சிகள் இதில் அடங்கும். இது வரை, சீனாவில் அனைத்துவித பல்வகை வசதிகள் கொண்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு மையமாக இது மாறியுள்ளது என்று தெரிகிறது.


நண்பர்களே, பண்பாட்டுத் தொழில் துறை என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.