பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கான புனிதத் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டிலான ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், ஒலிம்பிக் புனிதத் தீப வரலாற்றில் மற்றுமொடு மைல் கல்லாகும். இது தோள் கொடுக்கும் புனித கடமையை நிறைவேற்றும் என்று Istanbulஇலுள்ள சீனத் துணைத் தூதர் zhang zhiliang கூறினார்.ஏப்ரல் திங்கள் 3வது நாள், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் தீபம், துருக்கியின் Istanbul வந்தடையும். இவ்வாண்டு, துருக்கி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் கமிட்டி நிறுவப்பட்ட 100வது ஆண்டு நிறைவாகும். ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கைகள், Istanbul இல் நடைபெறுவது, நடைமுறை மற்றும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று zhang zhiliang கூறினார்.
Istanbulஇலுள்ள சீனத் துணைத் தூதரகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கைகளுக்கான முழுமையான பங்காற்றுவார்கள் என்று zhang zhiliang கூறினார்.
|