வட சீனாவின் shanxi மாநிலத்தின் taiyuan நகரில், வெளிநாட்டவரொருவர் நடத்தி வரும் அன்பளிப்புப் பொருள் கடை ஒன்று இருக்கிறது. இதன் பெயர், ஜோஜோவின் வீடு. இக்கடையில், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகள் மற்றும் பிரதேசங்களிலான மரவேர் செதுக்கல்கள், மரச் சிற்பங்கள், ஜேட்கள் முதலியவை, விற்கப்படுகின்றன. இக்கடை, shanxi மாநிலத்தில் வெளிநாட்டவர் ஒருவர் நடத்தும் முதலாவது கடையாகும். ஆர்வத்துடன் எங்கள் செய்தியாளர், இக்கடைக்குச் சென்று தூரமான Zimbabweயிலிருந்து வந்த அதன் உரிமையாளர் Josephஐ சென்று பார்த்தார்.
ஜோஜோயின் வீட்டுக்கு வருவதற்கு வரவேற்புக்கள். என்று சீன மொழியில் Josephஎங்களுக்கு வரவேர்பு தெரிவித்தார்.
Joseph இன் தந்தை Zimbabwe நாட்டவர். அவரின் தாய் பிரிட்டன் நாட்டவர். அவரின் அன்பளிப்புப் பொருள் கடை, 2007ம் ஆண்டின் செப்டம்பர் திங்களில் துவக்கப்பட்டது. இக்கடையின் பரப்பளவு, சுமார் 10 சதுர மீட்டராகும். கதவின் இரண்டு பக்கங்களிலான அலமாரிகளில், ஜேட்களும் பீங்கான் பொருட்களும், பின்சுவரின் அலமாரிகளில் மரவேர் செதுக்கல்களும், மரச் சிற்பங்களும் காணப்படுகின்றன.
Joseph சுற்றுலா செய்வதை மிகவும் விரும்புகின்றார். 5 ஆண்டுகளுக்கு முன், அவர் சீனாவுக்கு வந்து, கடலோர மாநிலமான guangdong மாநிலத்தின் shaoguan, zhuhai நகர்களில் 2 ஆண்டுகள் தங்கியிருந்தார். பிறகு அவர் உள்பிரதேசங்களைப் பார்க்கும் வகையில், shanxi மாநிலத்துக்குச் சென்றார்.
இங்கு வந்த போது, நான் இங்கு ஓராண்டு மட்டும் தங்கியிருக்க திட்டமிட்டேன். ஆனால், எவ்வளவு நீண்டகாலம் தங்கி முடியுமோ அவ்வளவு காலம் இங்கு வாழ விரும்பினேன். நான் புதிதாக taiyuanக்கு வந்த போது, அனைவரும் என்னை உற்சாகமாக வரவேற்றனர். இது என் மனதில் ஆழமாக பதித்துள்ளது. அதனால் நான் மேலும் ஓராண்டு இங்கு தங்கியிருந்தேன். இவ்வாண்டு 3ம் ஆண்டாகும். தற்போது நான் shanxiஐ விட்டுச் செல்ல விரும்பவில்லை. இதை, என் இரண்டாவது ஊராகக் கருதுகிறேன். என்றார் அவர்.
சீனாவுக்கு வரும் முன், Joseph பல நாடுகளில் சுற்றுலா செய்துள்ளார். ஒவ்வொரு இடத்திலான சிறப்பு மிக்க அன்பளிப்புப் பொருட்களைத் திரட்டியுள்ளார். காலப்போக்கில் இவை அதிகமாகி, ஒரு கடையை திறப்பது என்ற எண்ணம் அவருக்கு வந்தது. திடமான மனவுறுதியுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவது திண்ணம் என்று அவர் நம்புகிறார். இந்த எண்ணம் அவருக்கு வந்ததும், இக்கனவை நனவாக்கத் தொடங்கினார்.
ஒரு விடயத்தை செய்யும் முன், இதை பற்றி நான் அதிகமாக அறிந்து கொள்வேன். அப்போது, எனக்கு உதவி செய்ய நான் ஒரு மொழிப்பெயர்ப்பாளரை அழைத்தேன். நான் முழு மூச்சுடன் செயல்பட்டு, கடைசியில் வெற்றி பெற்றேன்.
கடையைத் தொடங்குவதற்கு முந்திய பல்வகை ஆயத்தப் பணிகளை பற்றி குறிப்பிடுகையில், அரசின் பணியாளர்கள் அவருக்கு பெரிய உதவி அளித்தனர் என்று அவர் கூறினார்.
நான் பல வாரியங்களுக்குச் சென்றேன். இவ்வாரியங்களின் பணியாளர்கள் எனக்கு மிகப் பெரிய உதவி அளித்தனர். அதனால் தான் இந்த ஒழுங்கு முறை எளிதாக மாறியது என்றார் அவர்.
அன்பளிப்புப் பொருள் கடை நட்த்துவது, Josephயின் ஓய்வு நேர பொழுது போக்காகும். அவரின் அதிகாரப்பூர்வ பணி, shanxiதொழில் மற்றும் வணிகக் கல்லூரியின் ஆங்கில மொழி ஆசிரியர் பணியே. நிதானமான பணியைக் கொண்டிருந்தும், ஏன் அவர் இன்னும் நேரத்தை செலவிட்டு இக்கடையை நடத்துகின்றார்? அவர் எங்கள் செய்தியாளரிடம் கூறியதாவது,
shanxiயிலே உலகின் பல்வேறு இடங்களிலான அன்பளிப்புப் பொருட்களைக் கண்டறிய முடியும் என்பதை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் சீனாவில் என்ன செய்கிறேன் என்பதை, பிரிட்டன் மற்றும் Zimbabweயிலான என் நண்பர்களைப் பார்க்கச் செய்ய விரும்புகிறேன். நான் வெளிநாட்டு நண்பர்களுக்கு சீனாவை பிரச்சாரம் செய்ய முடியும். இதுவே, இக்கடையை நடத்துவதன் நோக்கமாகும். தவிர, இங்கு நான் மேலும் அதிகமானோருடன் பழகி நண்பர்களாக முடியும். இந்நகரில், சீன நண்பர்கள், வெளிநாட்டவர்களைப் பற்றி அறிய முடியும். நாங்கள் சமமாகவும் நட்பாகவும் பழகுகிறோம். இது, ஒரே உலகம், ஒரே கனவு என்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முழக்கம் போல் இருக்கிறது.
ஒரே உலகம், ஒரே கனவு பற்றியும், துவங்கவுள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றியும், Josephஇன் உற்சாகம், சீன மக்களை விட குறைந்து விடவில்லை.
2007ம் ஆண்டின் செப்டம்பர் திங்கள் 7ம் நாள், சீனாவிலான வெளிநாட்டவர்களின் கனவை நனவாக்கும் வகையில், சீனாவின் lenovo தொழில் குழுமம், சீனாவிலான ஒலிம்பிக் தீபம் ஏந்தும் வெளிநாட்டவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையை நடத்தியது.
சீன நாளேட்டிலிருந்து இத்தகவலை அறிந்ததும், Joseph இந்நடவடிக்கையில் கலந்து கொள்ள பெயரை பதிவு செய்தார்.
அதிர்ஷ்டமாக, நான் 500க்கு மேலான வேட்பாளர்களிலிருந்து முதல் 100 வேட்பாளர்களில் ஒருவராக மாறினேன். பிறகு 100 வேட்பாளர்களிலிருந்து 8 பேரை தேர்ந்தெடுத்தனர். ஆனால், நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் முதல் 100 வேட்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மிகவும் அதிருஷ்டவசமானது.
இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாத போதிலும், Joseph, enovo தொழில் குழுமம் அளித்த நினைவுப் பொருள் பெற்றார். இந்நினைவுப் பொருளை முழு வாழ்விலும் மதிப்புடனா பாதுகாப்பார் என்று அவர் கூறினார். ஏனெனில், இது, அவர் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட சான்றாகும். சீனாவின் அன்பின் சான்றாகும்.
சீனாவில் Joseph மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, தன் கனவுகளை நனவாக்க வேண்டுமென நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்.
|