• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-31 09:43:53    
வென்ஜியாபாவின் கருத்து

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், பல்வேறு நாட்டு மக்களுடனான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டுமென, சீன விரும்புகிறது. சீன தலைமையமைச்சர் வெந்சியாபாவ் 18ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது ஆண்டு கூட்டத்தொடருக்கு பின்னர் செய்தியாளர் கூட்டதில், இவ்வாறு தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மேலும் சிறந்ததாக நடத்தி, விளையாட்டு வீரர்களையும் உலக மக்களையும் மனநிறைவு பெறச் செய்ய வேண்டும் என்று, சீனா விரும்புவதாக, அவர் கூறினார்.

சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் குழுவின் மருத்துவவியல் ஆணையம், உள்ளூர் நேரப்படி 17ம் நாள், பெய்ஜிங் காற்றுத் தரத்துக்கான தொடர்புடைய ஆய்வு மற்றும் மதிப்பீடுகளை வெளியிட்டது. ஆகஸ்ட் திங்கள் காலத்தில் பெய்ஜிங் காற்றுத் தரம், அடிப்படையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காது என்று அது கருதுகிறது.
முந்தைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் போன்று, காற்றுத் தரத்தின் இடர்ப்பாட்டைக் குறைத்து, விளையாட்டு வீரர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதை நாம் உத்தரவாதம் செய்வோம் என்று இவ்வாணையத்தின் தலைவர் Arne Ljungqist அறிக்கையில் தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் காலத்தில், பெய்ஜிங் காற்றுத் தரம் மேலும்

மேம்படுத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு நம்புவதாகவும் அவர் கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேசிய விளையாட்டரங்கான பறவை கூடு உள்ளிட்ட திடல்கள் மற்றும் அரங்குகளின் பணிகள் சுமுகமாக நடைபெறுகின்றது. திட்டப்படி, இவ்வாண்டு ஏப்ரல் திங்களில், இது முமையாக கட்டிமுடிக்கப்படும். பெய்சிங் 2008ம் ஆண்டு திட்டப்பணி அலுவலகத்தின் துணைத் தலைவர் வாங் காங் 20ம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.
கட்டியமைக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட 31 ஒலிம்பிக் திடல்களும் அரங்குகளும் மற்றும் 45 பயிற்சி திடல்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அனைத்து திடல்களிலும் அரங்குகளிலும் பறவை கூடு கடைசியாக கட்டிமுடிக்கப்படும் என்று வாங் காங் கூறினார்.