• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-31 19:16:10    
பெய்ஜிங் ஒலிம்பிக் புனித வரவேற்பு விழா

cri

இன்று, சீன சர்வதேச பயணியர் விமான நிறுவனத்தின் ஒலிம்பிக் புனித என்னும் சிறப்பு விமானத்தின் மூலம், பெய்ஜிங் ஒலிம்பிக் புனித தீ, Athens நகரிலிருந்து பெய்ஜிங் மாநகர் வந்தந்தது. இன்று முற்பகல், பெய்ஜிங் ஒலிம்பிக் புனித தீ வரவேற்பு விழாவும் தீபத் தொடரோட்டம் துவக்க விழாவும் டியென் அன் மன் சதுக்கத்தில் நடைபெற்றன. சீனாவின் தலைவர்கள் ஹூசிங்தாவ், சீ ஜின் பிங், சர்வதேச மற்றும் கிரேக்கம் ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகள், சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதர்கள், 6000 பொது மக்கள் ஆகியோர் இவ்விழாக்களில் கலந்துகொண்டனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவக்குவதற்கு முன்தைய 130வது நாளான இன்று, ஒலிம்பிக் விளையாட்டு உருவான இடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட புனித தீ, கம்பீரமான இசை முழங்க பெய்ஜிங் மத்திய பகுதியிலுள்ள டியென் அன் மன் சதுக்கத்தை அடைந்தது. அவ்விடத்தில் கூடியிருந்த ரசிகர்கள், ஆரவாரமான கரவொலி மற்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இவ்விழாவில், சீன அரசு தலைவர் ஹூசிங்தாவ், சீனாவிற்கான முதல் தீபத்தை, சீனாவின் புகழ் பெற்ற தடகள வீரர் liu xiangகுக்கு வழங்கினார். அவர் கூறியதாவது---

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் துவங்குகிறது என்று நான் அறிவிக்கிறேன்.

இப்போது முதல், 130 நாட்களாக, பெய்ஜிங் ஒலிம்பிக் தீப தொடரோட்டம், உலகளவில் நடைபெறும். இணக்கமான பயணம், இத்தீப தொடரோட்டத்தின் தலைப்பாகும். இது, ஐந்து கண்டங்களைக் கடக்கும். தொடரோட்ட தூரம், ஒரு இலட்சித்து 37 ஆயிரம் கிலோமீட்டராகும். பங்குகொள்கின்றவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை அடையும். ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் மிக அதிக தொலைவான மிக அதிகமானோர் கலந்துகொள்கின்ற தீப தொடரோட்டம் இதுவாகும்.

சீன துணை அரசுத் தலைவர் சீ ஜிங் பிங், உரை நிகழ்த்தி, ஒலிம்பிக் புனித தீயை வரவேற்றார். அவர் கூறியதாவது---

சிறப்பு வாய்ந்த, உயர் நிலையான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது, அனைத்து சீன மக்களின் கூட்டு விருப்பமாகும். உலகில் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களும் நண்பர்களும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதை, சீன அரசும், மக்களும் வரவேற்கின்றனர். நண்பர்களுடன் இணைந்து, ஒலிம்பிக் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, பல்வேறு நாடுகளின் மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நுட்பத்தை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம்.

இத்தீப தொடரோட்ட துவக்க விழாவுக்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் Jacques Rogge கடிதம் அனுப்பியிருந்தார். சர்வதேச ஒலிம்பிக் குழுவின், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் Hein Verbruggen Roggeவின் கடிதத்தை வாசித்தார். இன்று முதல், இத்தீப தொடரோட்டம், உலகளவில் நடைபெறும். இத்தொடரோட்டத்தில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்த்துக்கள் ஆகியவை மக்களுக்கிடையில் பரவல் செய்யப்படும் என்று அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் புனித தீ, கிரேக்கம் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்ட பிறகு, கிரேக்கத்தில் தொடரோட்டம் நடத்தப்பட்டது. நேற்று ஒலிம்பிக் புனித தீக்கான ஒப்படை விழா, Athenes நகரில் நடைபெற்றது. பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் தலைவர் liu qi இவ்விழாவில் கலந்துகொண்டார். இன்று நடைபெற்ற தீப தொடரோட்டத்தின் துவக்க விழாவிலும் அவர் கலந்துகொண்டார். அவர் கூறியதாவது—

பசுமை ஒலிம்பிக், அறிவியல் ஒலிம்பிக், மனித முதன்மை ஒலிம்பிக் ஆகிய பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மூன்று கருத்துகளை பன்முகங்களிலும் நிறைவேற்றப்படுத்த வேண்டும். மிக அதிகமான பேரூக்கம் கொண்டு, மிக அதிகமான முயற்சிகள் செய்து, 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றி பெற உத்தரவாதம் செய்ய வேண்டும்.

ஏப்ரல் திங்கள் முதல் நாள், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம், கஸாக்ஸ்தானின் Alma-ata நகருக்கு செல்லும். தீப தொடரோட்டம், வெளிநாடுகளில் துவங்கும். மே திங்கள் தொடக்கத்தில், இத்தீபம், சீனாவுக்கு மீண்டும் திரும்பும்.