• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-01 15:44:56    
புத்தர் கோயில் (அ)

cri

Da fo என்னும் புத்தர் கோயில் கற்குகை, 629ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. இது Jing ஆற்றின் தென் கரையையும், Bin மாவட்டத்தின் மேற்குக் கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள Xi Lan நெடுஞ்சாலையையும் ஒட்டியமைந்துள்ளது. முன்பு, இது, Qing Shou கோயில் எனவும் அழைக்கப்பட்டது.

Da fo புத்தர் கற்குகை, முழு கோயிலின் நடுவில் இருக்கிறது. அதன் வாயிலிலிருந்து 3 மீட்டர் தொலைவிலேயே நெடுஞ்சாலை உள்ளது. கற்குகையில் வாயில், அரைவட்ட வடிவமாகும். இவ்வட்டத்தின் விட்டம், சுமார் 21 மீட்டராகும். அதன் உயரம், சுமார் 30 மீட்டராகும்.

இக்கற்குகையில், 3 கற்சிற்பங்களும், பல சிறிய புத்தர் சிலைகளும் இருக்கின்றன. ஒரு பெரிய புத்தர், கல்லின் அருகில், பல சிறிய புத்தர் சிலைகளிடையில் உட்கார்கின்றது. அதன் தோள், அகலமாக இருக்கிறது. உயரம், சுமார் 24 மீட்டர். இக்கற்குகைக்கு முன், 3 மாடிகளைக கொண்ட மாளிகை ஒன்று இருக்கிறது. இப்புத்தரின் பக்கங்களிலுள்ள Bodhisattvaகளின் தலைகளில், மணித் தொப்பிகளும், பகட்டான அணிகலன்களும் உடுத்தப்பட்டுள்ளன. அவற்றின் உயரம், சுமார் 5 மீட்டராகும். அதனால், அவை, 80 அடி புத்தர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

இக்கற்குகையின் அளவு, பெரிதாக இருக்கிறது. அங்குள்ள சிற்பங்கள், அழகாக இருக்கின்றன.

இந்த பெரிய புத்தர், தாமரை மேடையில் அமர்ந்து காணப்படுகிறார். இடது கை ஏந்தி, முழங்காலில் வைக்கப்பட்டு, வலது கை ஓங்கி, உடம்புத் தோற்றம், அமைதியாகக் காணப்படுகிறது. அதன் தலையின் அருகில், பிற 7 புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன.