• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-01 10:15:22    
இன்றைய நிகழ்ச்சியில் முதலில், சீனாவில் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழக மாணவருக்கான சலுகை கொள்கை

cri
நேயர்களே, இவ்வாண்டு செப்டெம்பர் திங்கள் புதிய கல்வி ஆண்டு துவங்கியது முதல், சீனக் கல்வி துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகங்களில், மாணவர்களிடையில் இலவச கல்வி கொள்கை மீண்டும் நடைமுறைக்கு வரத் துவங்கியது. வறிய மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவேற்ற உதவி செய்யும் அதேவேளையில், இச் சலுகை கொள்கை, சீனக் கிராமப்புறங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற நிலைமையையும் மேம்படுத்தும் என்று கல்வி துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.

நவ சீனா நிறுவப்பட்ட பின், சீனாவில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் சலுகை கொள்கையை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் கல்வி கட்டணத்தையும் இதர கட்டணங்களையும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், 1997ம் ஆண்டுக்கு பிறகு, மாணவர்கள் கல்வி கட்டணத்தை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த காரணங்களால், சீனாவின் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை ஏன் முழுக்கட்டணத்தையும் படிப்படியாக பெற்று வந்தன. இவ்வாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற 10வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தில் சீனத் தலைமை அமைச்சர் வென் சியா பாவ் அரசு பணியறிக்கையை வழங்கிய போது, சீனக் கல்வி துறை அமைச்சகத்தின் கீழுள்ள ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகங்களில், மாணவர்களிடையில் இலவச நியாய கல்வியையும் மேற்கொண்டு, இதற்குரிய கட்டமைப்பை அரசு உருவாக்கும் என்று கூறினார். கல்வி வளர்ச்சியையும் கல்வி கட்டாயத்தையும் விரைவுப்படுத்துதல், ஆசிரியர் கல்வி துறையிலான சீர்திருத்தத்தையும் வளர்ச்சியையும் வலுப்படுத்துதல், மேலும் அதிகமான சிறந்த மாணவர்களை ஆசிரியராக பயிற்றுதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

zhu min zan என்ற மாணவர் இவ்வாண்டு நடைபெற்ற தேர்வில், 617 என்ற உயர் மதிப்பெண்ணுடன், பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் வரலாற்று இயல் துறையில் சேர்ந்தார்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, zhu min zan பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் நுழைவு சான்று பெற்ற போது, ஆசிரியர்கள் அவருக்கு தெரிவித்த வாழ்த்துக்கள்.

இந்த புதிய சலுகை கொள்கையின் படி, 4 ஆண்டு கல்வி காலத்தில், மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம், வாழ்க்கை உதவி தொகை ஆகியவற்றை அரசு பொறுப்பேற்கும். இதற்குப் பிரதிபலனாக, இச் சலுகை கொள்கையை அனுபவிக்கும் மாணவர்கள், கல்வி துவங்குவதற்கு முன், பல்கலைக்கழங்களுடனும், தாம் இருக்கும் மாநில நிலை கல்வி நிர்வாக வாரியங்களுடனும் உடன்படிக்கை ஒன்றை உருவாக்க வேண்டும். பட்டம் பெற்ற பின், துவக்கப்பள்ளி அல்லது இடைநிலைப் பள்ளிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிய வேண்டும் என்று மாணவர்கள் இவ்வுடன்படிக்கையில் உறுதி மொழியளிக்க வேண்டும். தவிர, நகரங்களிலுள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமானால், கிராமப்புறக் கட்டாயக் கல்விப் பள்ளிகளில் அவர்கள் 2 ஆண்டு காலம் கட்டாயமாக கற்பிக்க வேண்டும்.

ஒரு சிறந்த ஆசிரியராக மாறுவது ZHU MIN ZANஇன் கனவாகும். அரசின் சலுகை கொள்கை, அவரளது குடும்பத்தின் சுமையைப் பெரிதும் குறைத்துள்ளது. அவர் கூறியதாவது

சீனாவின் தலைசிறந்த ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும் என்று நீண்ட காலமாகவும் உறுதியாகவும் விரும்புகின்றேன். சீனாவில் ஒரு தலைசிறந்த ஆசிரியராக மாறுவது எனது கனவாகும். நான் ஒரு விவசாயியின் மகன். கிராமப்புறங்களில் குழந்தைகள் கல்வி பயில மாபெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற பின், நான் பெற்ற கல்வியறிவை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இக்கல்வியறிவு அவர்களது எதிர்காலத்தையே மாற்றலாம். உள்ளூர் பொருளாதார நிலைமையை மாற்றலாம் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்துவேன் என்றார் அவர்.

இந்த 6 பல்கலைக்கழகங்கள் இவ்வாண்டு மொத்தம் சுமார் 10 ஆயிரம் மாணவர்களைச் சேர்த்துக்கொண்டன. அவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார வளர்ச்சி குன்றிய மேற்கு பகுதியைச் சேர்ந்தவராவர். ஒவ்வொரு மாணவரும் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் யுவான் நிதி உதவியை பெறலாம்.

இவ்வாண்டு பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம் சேர்க்கும் புதிய மாணவர்களில் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை முன்பை விட தெளிவாக அதிகரித்துள்ளது. இலவச கல்வி பெறும் மாணவர்களின் தரம் சிறந்து விளங்குகின்றது என்று இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை அலுவலகத்தின் தலைவர் tu qing yun கூறினார். அவர்கள் கல்வி இலட்சியத்தை நேசிக்கின்றனர். இது மேலும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது

மாணவர்களின் தரத்தைப் பார்த்தால், இவ்வாண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் முன்பு இருந்த நிலையை நிலைநிறுத்துகின்றது. ஆகையால், தரமான மாணவர்களைச் சேர்க்கின்றோம் என்று கூறலாம். தவிர, அவர்கள், தங்களது மாநிலம் அல்லது பிரதேசத்தின் அடிப்படை கல்வியின் வளர்ச்சிக்கு பங்கு ஆற்ற வேண்டும் என்று அறிந்து கொள்கின்றனர் என்றார் அவர்.

மேலும், சலுகை கொள்கையின் படி, பல்கலைக்கழகங்கள் இந்த மாணவர்களுக்காகச் சிறந்த ஆசிரியர்களைத் தேர்தெடுக்க வேண்டும். பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் han zhen கூறியதாவது

தத்துவத்தையும் நடைமுறையையும் ஒன்றிணைக்க வேண்டும். அதாவது, கல்வியியல், உளவியல் உள்ளிட்ட சிறப்பு பாடப் பயிற்சியை தவிர, மாணவர்களுக்கு நடைமுறைத் தன்மை கொண்ட பயிற்சிகளையும் அளிக்கின்றோம். உள் மங்கோலியா, சான் சி ஆகிய இடங்களில் சில பயிற்சி தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

அண்மையில், சீனத் தலைமை அமைச்சர் வென் சியா பாவ் பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்துக்குச் சென்று, புதிய மாணவர்களைப் பார்த்தார். முயற்சியுடன் பயின்று, சிறந்த பண்பு நலன்கள் மற்றும் திறமை உடைய மக்கள் ஆசிரியர்களாக மாற பாடுபட வேண்டும் என்று அவர் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.