• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-01 09:31:41    
ஒரு வகை கடல் மீன்

cri

வாணி – இன்று நாம் ஒரு மீன் வகை வறுவல் பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் – அப்படியா?எந்த வகை மீன்?
வாணி – ஒரு வகை கடல் மீன். பெயர் Yellow Croaker, இதன் செதில்கள் மஞ்சல் நிறமாகும்.


க்ளீட்டஸ் – இன்றைய உணவு வகை எந்த சுவை?
வாணி – ஒரு வகை இனிப்பு மற்றும் புளிப்பு மீன் வறுவலை தயாரிக்கவுள்ளோம்.
க்ளீட்டஸ் – ஓ, இது சுவையானது என்று நம்புகின்றேன். வாணி, இதற்குத் தேவையான பொருட்களை எடுத்து கூறுங்கள்.
வாணி – சரி. முதலில்,


Yellow Croaker 1 தேவை
சிவப்பு முள்ளங்கி, அரை அளவு
பட்டாணி 50 கிராம்
பூண்டு 4 cloves
வெங்காயம், இஞ்சி போதிய அளவு
சமையல் மது 2 தேக்கரண்டி
உப்பு 10 கிராம்
கிழங்கு ஸ்டாச் 30 கிராம்
தக்காளி ஸ்டாச் 4 தேக்கரண்டி
தன்னீர் 100 மல்லிரிட்டர்
சர்க்கரை 2 தேக்கரண்டி
Liquid starch 2 தேக்கரண்டி
வெள்ளை காடி 1 தேக்கரண்டி

க்ளீட்டஸ் – இன்று தேவைப்படும் பொருட்கள் அதிகம் தான்.
வாணி – ஆமாம். மீன் வறுவலைத் தயாரிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டம். அல்லவா?
க்ளீட்டஸ் – சரி, முதலில், மீன்னின் செதில்களையும் வயிற்றுள்ளவையையும் நீக்கி மீன்னை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, இதன் மீது குறுக்கும் நெடுக்குமாகச் சிறு கோடு போடுங்கள். 5 கிராம் உப்பு, சமையல் மது ஆகியவற்றுடன் மீன்னை கலந்து, சுமார் 30 நிமிடங்கள் அப்படியே இருக்கவிட வேண்டும்.


வாணி – பட்டாணிகளையும் சிவப்பு முள்ளங்கியையும் சுத்தம் செய்யுங்கள். சிவப்பு முள்ளங்கியின் தோலைப் பிரித்து, இதனை சிறிய பொடிகளாக அரிந்து வையுங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
க்ளீட்டஸ் – காயவைக்கப்பட்ட மீன்னின் இரு பக்கங்களில் dry கிழங்கு ஸ்டார்சை கலைக்கவும்.
வாணி – அடுப்பின் மீது வாணலியை வைத்து, இதில் சமையல் எண்ணையை ஊற்றவும். எண்ணெய் சூடான பின், மீன்னை இதில் வைக்கலாம். இதன் இரு பக்கங்களும் பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும். பிறகு, வெளியே எடுக்கலாம்.

க்ளீட்டஸ் – வாணலியில் கொஞ்சம் எண்ணெய் மீதம் வைக்க வேண்டும். முதலில், அரைக்கப்பட்ட வெங்காயும், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை இதில் கொட்டு, நன்றாக வறுக்கவும். மணல் வந்த பிறகு, சிவப்பு முள்ளங்கி, பட்டாணி ஆகியவற்றை இதில் சேர்க்கலாம். சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும்.

வாணி – இப்போது, வாணலியில் தக்காளி ஸ்டார்சு சேக்கலாம். மேலும், 5 கிராம் உப்பு, சர்க்கரை, தன்னீர், ஆகியவற்றையும் சேர்க்கலாம். வேகவிடுக்கப்பட்டப் பின், வெள்ளை காடி, Liquid starch ஆகியவற்றை இதில் ஊற்றலாம். இந்த இனிப்பு-புளிப்பு சூப்பு, மீன்னின் மீது ஊற்றவும். இது தான் இன்றைய மீன் வறுவல்.


வாணி – சரி, நேயர்களே, முன்பு எமது நிகழ்ச்சியில் சொன்னது போல, அதிகமாக மீன் வகைகளைச் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. இந்த இனிப்பு – புளிப்பு மீன் வறுவலை வீ்ட்டில் தயாரித்து ருசிப்பார்க்கவும். நல்ல சுவை தான்.
க்ளீட்டஸ் -- இந்த வறுவல் பற்றிய விவரமும் நிழற்படமும் எமது இணையதளத்தில் இடம்பெறுகின்றன.