• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-01 09:43:43    
நிகழ்ச்சிகளை கேட்ட பின் தெரிவித்த கருத்துக்கள்

cri

க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதல் கடிதம் ஈரோடு சங்கு நகர் வெ. ராஜேஸ்வரி எழுதியது. மக்கள் சீனம் நிகழ்ச்சியில் சீனாவின் மையப்பகுதியான ஹூபெய் மாநிலத்தின் கிராமப்புறங்களில் மீத்தேன் வாயு பயன்பாடு அதிகரித்துள்ளது, உணவு சமைத்தல், நீர் சூடேற்றல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிந்தோம். விறகுப் புகையால் வரும் பாதிப்பை மீத்தேன் வாயுப் பயன்பாடு குறைத்துள்ளது. மர வளர்ப்பு 69 விழுக்காட்டை எட்டியுள்ளது, கிராம சுகாதாரம் மேம்பட்டுள்ளது என்றும் அறிந்தபோது, மக்களின் நலனில் அரசு கொண்டுள்ள கவனம் வெளிப்படுகிறது.


கலை: அடுத்து இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானிலான தேர்தல் பற்றியும், அதற்கான பாதுகாப்பு மற்றும் நியாயமாக நடைபெறுவதற்கான உறுதிப்பாடு ஆகியவை பற்றியும் அறிந்துகொண்டேன். வழங்கிய சீன வானொலிக்கு நன்றி.
க்ளீட்டஸ்: அடுத்து மீனாட்சிபாளையம் கா. அருண் எழுதிய கடிதம். செய்தித்தொகுப்பில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், சீன அரசு அவர்களுக்கு வசிப்பிட மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று அறிந்தேன். இந்த மருத்துவமனைகள் மக்களுக்கு அளிக்கும் சேவைகள், அவற்றை மக்கள் பயன்படுத்தும் விதம் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது.


கலை: அடுத்து தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம். உண்ணாநோன்பு பற்றிய அறிவியல் உலகம் நிகழ்ச்சி கேட்டேன். நேர்த்தி கடனுக்காக, சூழல் காரணமாக, போராட்டமாக என தமிழகத்தில் பல வழிகளில் உண்ணாநோன்பை கையாள்கின்றனர். உண்ணாநோன்பிருப்பது உடலின் கொழுப்புத்தன்மையை குறைத்து இதய நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமிழ்தாய் இருப்பினும் அளவுக்கு மீறினால் நஞ்சாகிப்போகும் என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. நல்லதொரு தகவலை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுத்த தமிழன்பனுக்கு நன்றிகள்.


க்ளீட்டஸ்: உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி பெரியகாலாப்பட்டு சந்திரசேகரன் எழுதிய கடிதம். அறிவிப்பாளர்களின் பங்கு அதிகமா இல்லை நேயர்களின் பங்கு அதிகமா என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்ட நேயர் மன்றம் தயாரித்து அனுப்பிய பட்டி மன்றம் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தேன். பூ இருந்தும் வாசமில்லையெனில், உடலிருந்தும் உயிர் இல்லையெனில், நிலவிருந்தும் ஒளியில்லையெனில் அவற்றில் பயனில்லை, வீச்சில்லை. வானொலிக்கு நேயர்களும், நேயர்களுக்கு வானொலியும் நண்பர்களாக அமைதலே நலம் என்பது என் கருத்தும், கோரிக்கையும்.
கலை: சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி பற்றி மறைமலைநகர் சி. மல்லிகாதேவி எழுதிய கடிதம். சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியைக் கேட்டு காலச்சுவடுகளை குறித்துக்கொண்டு வருகிறேன். 1988ம் ஆண்டு செப்டெம்பர் 25ம் நாள் நீர்மூழ்கி கப்பல் மூலம் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது என்பது போன்ற தகவல்களை அறிய இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவுகிறது.


க்ளீட்டஸ்: அடுத்து புதிய காத்தான்குடி எஃப். ஏ. எம். அஸ்மத் எழுதிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை தொடர்ந்து கேட்டு வருகிறேன். சீனாவில் இன்பப்பயணம், மலர்ச்சோலை, அறிவியல் உலகம் ஆகிய நிகழ்ச்சிகள் என்னை கவர்ந்தவை. சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியை என் தாயார் விரும்பி கேட்பார். நான் உயிரியல் துறையில் கல்வி கற்பவராக இருப்பதால் வியாழனன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியை கேட்டு பயனடைகிறேன்.

மின்னஞ்சல் பகுதி
முனுகப்பட்டு, பி. கண்ணன்சேகர்
சீன‌ கிராம‌ப்புற‌ங்க‌ளில் க‌ல்வியின் த‌ர‌ம் உய‌ர‌ அர‌சு மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ள் பாராட்டத்‌த‌க்க‌து. ஒரே மாநில‌த்தில் இர‌ண்டு ஆண்டுக‌ளில் க‌ல்வியின் த‌ரத்தை உய‌ர்த்துவ‌தற்கு தொட‌ர்புடைய வாரிய‌ம் 80 ல‌ட்ச‌ம் யுவானை செல‌விட்டு வருவ‌தால், ப‌ல‌ க‌ல்விக்கூட‌ங்க‌ள் ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சி அடைந்திருப்ப‌தை அறிய‌ முடிகிறது. கிராமப்புற‌ ப‌ள்ளிக்கூட‌ங்க‌ளில் க‌ல்வியின் த‌ர‌த்தை மேம்ப‌டுத்துவ‌தோடு, பிற திறமைகளையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தி எதிர்காலத்தில் தரமானவர்களாக அவர்களை உருவாக்க ஆசிரியர்களும் சீன அரசும் செயல்படுவது பாராட்டதக்கது!


ஊட்டி, எஸ்.நித்தியா
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேச அரசு லாசா நகரில் நிகழ்ந்த கடும் வன்முறையை சட்டப்படி கையான்ட பின் நாட்டு இறையான்மை, உரிமை பிரதேச ஒருமைப்பாடு, திபெத்தின் நிதானம் ஆகியவற்றை பேணி காப்பதற்காக சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு 100க்கும் மேலான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதையும், திரைக்கு பின்னால் சதிசெய்தவர்களையும் அந்நாடுகள் கண்டித்துள்ளதையும் அறிந்தேன். சர்வதேச சமூகம் சீனாவை ஆதரிப்பதையே இது முழுமையாக‌ காட்டுகின்றது என்பது அனைவருக்கும் நன்றாக புரியும். தங்களது தீய நோக்கத்தை நனவாக்க நினைப்பவர்களின் முயற்சி தோற்றுப் போவது உறுதி.
வளவனூர், முத்துசிவக்குமரன்,


ஒலிம்பிக் தீபம், கிரேக்க ஏதென்ஸ் நகரில் இன்று ஏற்றப்பட்ட நிகழ்ச்சியினை கண்கவர் புகைப்படத்துடனான செய்தியாக கண்டேன். இந்த ஒலிம்பிக் சுடர் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து, இறுதியில் சீனாவை அடைந்து, ஒலிம்பிக் திருவிழாவினை துவக்கும் அந்த நன்னாளினை காண உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
லாசா நகரில் மீண்டும் அமைதி திரும்பியிருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி. ஒரே சீனா என்ற உயரிய கொள்கையினை பின்பற்றினால் இது போன்ற கலவரங்களுக்கு வாய்ப்பே இல்லை. ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்பது தெரியாமல், சில தன்னலவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு மக்கள் திசை திரும்பாமல், இயல்பு வாழ்க்கையினை தொடருதல் வேண்டும்.


......திமிரி: எஸ்.அபிராமி குண்டலேரி: சு.சாலினி......
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்களின் நேர்காணல் சீன வானொலிக்கு சிறப்பு சேர்த்தது என்றால் அது மிகையில்லை! முக்கிய பொறுப்பில் இருக்கும் இவரை நேர்காணல் செய்த திரு.சீனிவாசன் மற்றும் திரு.நாச்சிமுத்துவை பாராட்டியே ஆகவேண்டும்.
இந்த நிகழ்ச்சி மூலமே பாரதியார் பல்கலைக்கழகத்தில் சீன மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதை அறிந்தேன். கடல் கடந்து கல்வியை கற்று தங்களை மேம்படுத்திக்கொள்ளும் சீன இளைஞர்களை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். சீன இந்திய நட்பு மேலும் வளர இது போன்ற நிகழ்ச்சிகள் நன்கு உதவும் என நம்புகிறேன்.