
தற்போது, hengdian திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையம், சீனத் தேசிய சுற்றுலா மண்டலமாக மாறியுள்ளது. 2007ம் ஆண்டு, 48 இலட்சம் பயணிகளை இம்மையம் உபசரித்துள்ளது. ஏராளமான பயணிகளும் பல கலைக் குழுகளும் இங்கு வருவதோடு, கணிசமான வணிக வாய்ப்புக்களையும் கொண்டு வந்துள்ளன.

hengdian திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையத்தை சார்ந்த zhanggenmiao, உணவு வணிகம் செய்கிறார். 2002ம் ஆண்டு முதல், xingguang உணவு விடுதியின் வியாபாரம் மென்மேலும் ஆக்கப்பூர்வமாக வளர்ந்து வந்துள்ளது.

திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையத் துறையின் வளர்ச்சியுடன், அங்குள்ள போக்குவரத்து மற்றும் நகரத்தின் தோற்றம் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் சிந்தனை, வெளியுலகின் வளர்ச்சியுடன் ஒரே நேரத்தில் முன்னேற்றி வருகிறது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியின் வளர்ச்சி மூலம், சுற்றுலாத் துறையைத் தூண்டுவது என்ற மாதிரியில் hengdian திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று நிபுணர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். ஆனால், இம்மையம் உருவாக்கப்பட்ட துவக்கக் காலத்தில், பல இன்னல்கள் ஏற்பட்டன. அந்த இன்னல்களைக் கண்டு இது நிலைநிறுத்தப்படவில்லை. இம்மையம், மக்கள் முன் கண்டிராத வளர்ச்சியின் வேகத்தில் தற்போது வளர்ந்து வருகிறது. இது வரை, இம்மையம் மொத்தம் 300 கோடி யுவான் மதிப்பு கொண்டது. திரைப்படம் மற்றும் தொலைகாட்சித் தயாரிப்புத் தளம், சுற்றுலா மண்டலம், விற்பனை நிறுவனம் உள்ளிட்ட ஏறக்குறைய 20 கிளை நிறுவனங்கள் இதில் அடங்குகின்றன. திரைப்படம் மற்றும் தொலைகாட்சிச் சுற்றுலா துறையில் வேலை புரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாகும்.

நண்பர்களே, திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|