லாசா நகரிலான வன்செயல்களில் சீர்குலைக்கப்பட்ட சில பள்ளிக்கூடங்களை செப்பனிடும் வகையில், திபெத் கல்வித் துறை அண்மையில் 6 இலட்சம் யுவான் அவசர உதவியை ஒதுக்கீடு செய்துள்ளது.
மார்ச் 14ம் நாள் நிகழ்ந்த வன்செயல்களால், லாசா நகரில் 7 பள்ளிக்கூடங்களின் கட்டுமானங்களும் கல்வி வசதிகளும் சீர்குலைக்கப்பட்டன. சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பணியாளர்கள் சிலர் காயப்பட்டனர். கல்வி வசதிகளின் இழப்பு, 26 இலட்சத்து 10 ஆயிரம் யுவானை எட்டியது என்று தெரிகிறது.
மார்ச் 17ம் நாள் முதல், லாசா நகரில் பல்வேறு நிலை பள்ளிகூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கல்வி நிலை இயல்பாக இருக்கிறது என்று தெரிகிறது.
|