மார்ச் திங்கள் 14ம் நாள் லாசா வன்செயல்களில், 18 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். சீன காவல் துறை அண்மையில் இவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது.
உயிரிழந்தவர்களில் 11 பேர் ஆண்கள். இவர்களில் 8 திங்கள் வயதான ஆண் குழந்தை ஒன்றும் அடங்குகிறது. மற்ற 7 பேர் பெண்கள்.
உயிரிழந்த 18 பேரில் 16 போரது பெயர், இனம், வயது, ஊர் ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேர் திபெத் இன மக்கள். 13 பேர் ஹான் இன மக்கள். ஏனைய இருவரின் அடையாளங்கள் கண்டறியப்படவில்லை. உள்ளூர் காவல் துறை அவர்களின் அடையாளங்களை மேலும் புலனாய்வு செய்து வருகிறது.
|