• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-02 14:15:08    
உளவியல் ஆலோசகர் Matt Marko

cri
உளவியல் ஆலோசனை, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பரவிவிட்டது. ஆனால் சீனாவில் இது புதிதாக வளரும் துறையாகும். பலர் இச்சேவை மீது ஆர்வம் கொண்டுள்ளனர். கிழக்கு சீனாவின் கடலோர நகரான Hang Zhou நகரில் அமெரிக்க உளவியல் மருத்துவர் Matt Marko, மற்றவர்களுடன் இணைந்து உளவியல் சிகிச்சை நிலையத்தை நிறுவியுள்ளார். இச்சிகிச்சை நிலையம், உள்ளூர் பிரதேசத்தில் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2002ஆம் ஆண்டு, மருத்துவ பரிமாற்றத் திட்டம், அவருக்கு சீனாவுக்கு வரும் வாய்ப்பு ஏற்படுத்தியது. அவர் கூறியதாவது:

"சீனப் பண்பாடு மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதால், சீனாவுக்கு வந்தேன். இங்கு வருவதற்கு முன், பன்னாட்டு பண்பாட்டு உளவியல் சிகிச்சை பயிற்சியில் கலந்து கொண்டுள்ள போதிலும், இது பற்றி மேலதிக முதல் தர தகவல்களைப் பெற விரும்பினேன். சீனாவில் தங்கும் காலம் கழிந்தவுடன், மேலும் கண்டுபிடிப்பு எனக்கு கிடைத்தது. உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சைத் துறையில் மேலதிக திறமைசாலிகள் சீனாவுக்கு தேவை என்று நினைக்கின்றேன்" என்றார், அவர்.

பரிமாற்றத் திட்டம் நிறைவடைந்த பின், மருத்துவர் Matt Marko அமெரிக்காவுக்கு திரும்பினார். சீன நண்பர்கள் பலர் மின்னஞ்சல் அனுப்பி, சீனாவுக்கு வந்து வேலை செய்யுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர். இது, அவரை மனமுருகச்செய்தது. சீனாவில் உளவியல் ஆலோசனை துறை தொடக்க கட்டத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டு, மருத்துவர் Matt Marko அமெரிக்காவிலான தமது பணியைக் கைவிட்டுவிட்டு, 2003ஆம் ஆண்டு சீனா வந்தடைந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, மருத்துவர் Matt Marko சில மருத்துவ மனைகளில் பணி புரிந்திருந்தார். கடந்த ஆண்டு, அவர், சில நண்பர்களுடன் Hang Zhou நகரில் உளவியல் சிகிச்சை நிலையத்தைத் நிறுவினார். நண்பர் ஒருவர், Ma Jun Jie என்ற சீன மொழி பெயரை அவருக்கு அளித்தார். மேலை நாடுகளின் தனிச்சிறப்புடைய சிகிச்சை முறையைக் கொண்டு, அவர் Hang Zhou நகரில் புகழ் பெற்றுள்ளார். அவர் கூறியதாவது:

"எங்கள் சேவை மேலை நாடுகளின் பாணியைக் கொண்டுள்ளது. இங்கு நோயாளிகளை யாரும் தொந்தரவு செய்யாத தனிமை உண்டு. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது, மற்றவர் அவ்விடத்தில் இருப்பதில்லை. நோயாளிகள் பற்றிய தகவல்களை மற்றவர் தெரிந்து கொள்ள முடியாது. இங்கு நோயாளிகள் ஓய்வாக இருந்து, நம்பிக்கையோடு இரகசியங்களை எங்களிடம் தெரிவிக்கின்றனர்" என்றார், அவர்.

நோயாளிகள் பற்றிய தகவல்கள் கண்டிப்புடன் பாதுகாக்கப்படுவதால், நோயாளிகள் பலர் இங்கு வருகின்றனர். பெரும்பாலான நோயாளிகள் சீனர்கள் ஆவர் என்றும், தாம் சீன மொழியை பேச முடியவில்லை என்ற போதிலும், தமக்கும் நோயாளிகளுக்குமிடை பரிமாற்றத்தில் மொழி தடையாக இல்லை என்றும் மருத்துவர் Matt Marko தெரிவித்தார். சில சமயங்களில், நோயாளிகள் ஆங்கில மொழியை பேச முடியவில்லை. தமது மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன், அவர் நோயாளிகளுடன் தொடர்பு கொள்கின்றார். நேரடி தொடர்பை விட இது வசதியாக இல்லை. இருந்த போதிலும், மருத்துவர் Matt Markoவின் இரக்கமான முகபாவனை மக்களை ஆறுதலடைய செய்கிறது என்றும், தமது இரகசியங்களை அவரிடம் தெரிவிக்க விரும்புவதாகவும் நோயாளிகள் பலர் கூறினர்.

ஒவ்வொரு நோயாளிக்கும் மருத்துவர் Matt Marko சிகிச்சை அளிக்க, நீண்ட நேரம் தேவைப்படுகிறது என்று Matt Markoவின் சக பணியாளரும், மொழிபெயர்ப்பாளருமான Guo Wen Tao தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சில சமயங்களில், தத்தமது இரகசியத்தைத் தெரிவிக்குமாறு நோயாளிகளுக்கு அவர் நீண்ட நேரம் அறிவுரை கூறுகின்றார். உளவியல் ரீதியான பிரச்சினை கொண்ட குழந்தைகளை அவரிடம் அறிமுகப்படுத்த விரும்புகின்றோம். ஏனெனில், அவர் தோற்றத்தில் Kentucky மாமாவை போல் காணப்படுகின்றார். அவரைச் சந்தித்ததும், குழந்தைகள் புன்னகை செய்கின்றனர்" என்றார், அவர்.

உளவியல் சிகிச்சையில், நோயாளிகளுடனான உரையாடல் மூலம், தத்தமது பிரச்சினைகளை அமைதியாக கேட்டு, சிக்கல்கள் ஏற்படும் ஊற்றுமூலத்தை நாடுமாறு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழிகாட்டுகின்றனர். அதன் மூலம், நோயாளிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு, அவர்கள் மீண்டும் செவ்வனே வாழ்க்கை நடத்தச் செய்கின்றனர். தமது உதவியுடன், 95 விழுக்காட்டு நோயாளிகள், உளவியல் ரீதியான நோய்களிலிருந்து விடுபட்டு, நம்பிக்கையார்வத்துடன் வாழ்கின்றனர் என்று Matt Marko செய்தியாளருக்கு தெரிவித்தார்.

நோயாளிகள், உளவியல் பிரச்சினையைத் தீர்க்க உதவுவது, Matt Markoவுக்கு மகிழ்ச்சி தருகிறது. தவிர, இன்பமான குடும்பம், அவருக்கு மகிழ்ச்சி தருவதற்கான மற்றொரு காரணமாகும். சீனாவுக்கு வந்த துவக்கத்தில், அவர் திருமணமாகாதவர். பின்னர், அவர், சீனரான Xu Hui Min அம்மையாரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு அன்பான மகள் பிறந்தார். தமது மகளை Matt Marko மிகவும் நேசிப்பதாக Guo Wen Tao கூறினார்.

சீனாவில் திருமணம் செய்த பின், Matt Markoவின் வாழ்க்கை, சீன சமூகத்துடன் கலந்து இணைந்துள்ளது. ஓய்வு நேரத்தில், சீன நண்பர்களுடன் இணைந்து ஒன்றாக, உணவகத்துக்கு அவர் செல்கின்றார். தவிர, நண்பர்களுடன் சேர்ந்து அவர் ஆடி பாடுகின்றார். நண்பர்களுடன் பழகுவது என்பது, அவருக்கு மகிழ்ச்சி தருகிறது.

சீனாவின் பாரம்பரியப் பண்பாடு மீது Matt Marko மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். 5 ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடைய சீனப் பண்பாட்டை ஆய்வு செய்வது ஆர்வம் தரும் விடயமாகும் என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது:

"சீனாவின் கட்டிட கலையை நேசிக்கின்றேன். இக்கட்டிடப் பாணி தனிச்சிறப்புடையது. தவிர, சீனாவின் புராணக் கட்டுக் கதைகள் ஆர்வம் தருகின்றன" என்றார், அவர்.

தாம் வாழும் நகரமான Hang Zhou பற்றி அவர் கூறியதாவது:

"Hang Zhou நகரத்தை மிகவும் நேசிக்கின்றேன். இங்குள்ள வானிலை நன்றாக இருக்கின்றது. Xi Hu ஏரி இங்கு அமைந்துள்ளது. இந்நகரில் வாழ்க்கை தாராளமானது. விரைவாகவில்லை"என்றார், அவர்.

எதிர்காலத்தில், Hang Zhou நகரின் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவி செய்ய Matt Marko விரும்புகின்றார். Hang Zhou நகரில் அனைவரும் இன்பமாக வாழ வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனாவில் மேலதிக ஆண்டுகள் தங்கியிருக்க விரும்புகின்றேன். இங்குள்ள அனைவற்றையும் நேசிக்கின்றேன். சீனாவின் வளர்ச்சிக்கான எதிர்காலம் ஒளிமயமானது. வாய்ப்பு இருந்தால், சீனாவின் வளர்ச்சிக்கு அதிக பங்காற்ற விரும்புகின்றேன்" என்றார், அவர்.