• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-02 09:23:33    
ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட செய்தி

cri
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், பெய்சிங் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளரும், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவருமான Liu Qi தலைமையிலான பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீ ஒப்படைப்பு விழாவுக்கான பிரதிநிதிக் குழு, "இணக்கமான சுற்றுலா" என்ற 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட சிறப்பு விமானத்தில் 30ம் நாள் பிற்பகல் கிரேக்கத்தின் தலைநகரான Athensயை சென்றடைந்தது.

இன்று பிற்பகல் நடைபெற்ற பெய்சிங் ஒலிம்பிக் புனிதத் தீ ஒப்படைப்பு விழாவில் அக்குழு கலந்துகொண்டது.
கிரேக்கத்திலுள்ள சீன தூதர் Luo Linquan, பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணை நிர்வாகத் தலைவரும் பொதுச் செயலாளருமான Wang Wei, கிரேக்க ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவர் Kyriakou, கிரேக்கத்தில் வாழ்கின்ற சீனரின் பிரதிநிதிகள் ஆகியோர், Athens சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று, இப்பிரதிநிதிக் குழுவை வரவேற்றனர்.
ஒலிம்பிக் போட்டியின் போது மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார காப்புறுதிப் பணியை செவ்வனே செய்வது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதன் முக்கிய அம்சமாகும். நாடு முழுவதுமான சுகாதாரத் துறைகள் இதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இன்று பெய்சிங்கில் நடைபெற்ற தேசிய சுகாதார கண்காணிப்புப் பணிக்கூட்டத்தில், சீனத் துணை சுகாதார அமைச்சர் மசிவௌவெய் இவ்வாறு கூறினார்.
தொடர்புடைய காப்புறுதிப் பணிகளின் பணித்திட்டத்தையும் முன்னெச்சரிக்கைத் திட்டத்தையும் சீனச் சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது என்றும் அவர்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சில நாடுகளின் தலைவர்களின் எதிர்ப்பால் பாதிக்கப்பட்டால், மிகக் கடுமையாக பாதிக்கப்படுவோர் விளையாட்டுவீரர்கள ஆவர்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயர் அதிகாரியும் ஹங்கேரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவருமான பால் ஷிமிட் இன்று தென்கொரிய இன்ச்சானில் தென்கொரியச் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுவீரர்களுக்கு, துவக்க விழா முக்கியமானதாகும். உலகின் 205நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள், மிகச் சிறந்த கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து இந்த துவக்க விழாவில் கலந்துக் கொள்வது என்பது உலகின் அமைதிக்கு ஆற்றும் பங்காகும் என்று ஷிமிட் குறிப்பிட்டார்.
இத்துடன் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு செய்திகள் நிறைவு பெறுகின்றன.