சீனாவின் தாவொர் இனம் முக்கியமாக உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்திலும் hei longjiang மாநிலத்திலும் கூடி வாழ்கின்றனர். சிலர், சிங்கியாங் tacheng மாவட்டத்தில் வாழ்கின்றனர். தாவொர் தொடங்குவர்கள் என்று பொருள்படுகிறது. இதன் மக்கள் தொகை, 1 இலட்சத்து 21 ஆயிரமாகும்.

தாவொர் இன மக்களுக்கு சொந்த மொழி உண்டு. ஆனால் எழுத்துக்கள் இல்லை. ச்சிங் வம்சத்தின் மன் இனப் பண்பாட்டின் செல்வாக்கினால், அவர்கள் மன் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். 20 நூற்றாண்டுக்கு பின் சீன மொழியை பொதுவாக பயன்படுத்தினர். சிலர், மங்கோலிய, உயிகூர் மற்றும் ஹசாக் மொழிகளையும் பயன்படுத்தினர். தாவொர் இன மக்கள், saman என்ற மதத்திலும் சிலர் lama மதத்திலும் நம்பிக்கை கொண்டவர்.

தாவொர் இன மக்கள் முக்கியமாக வேட்டையாட்டிலும் வேளாண்துறையிலும் ஈடுபடுகின்றனர். மீன்பிடிப்பு தொழில் வளர்ந்துள்ளது. தாவொர் இன மக்கள், வெண்ணிற ஆடைகளை அணிய விரும்புவதால் வெள்ளை ஆடை இனமாகக் கூறப்பட்டனர். தாவொர் இனத்தின் விழாக்களும் ஹான் இனத்தின் விழாக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கின்றன. தாவொர் இனத்தின் விளையாட்டு நடவடிக்கைகள், சிறப்பானவை. ஆண்கள் மற்போரையும் கால்பந்தாட்டத்தையும் பெண்கள் சீசா எனப்படும் பலகை விளையாட்டையும் ஊஞ்சலையும் விரும்புகின்றனர்.

தாவொர் இன மக்கள் சோறு சாப்பிடுவதை நேசிக்கின்றனர். சோறு சமைப்பதில் வல்லவர்கள். மிளகாய், அவர்களின் மிக முக்கிய உணவாகும். சாப்பிடும் போது உணவு பாத்திரங்களைப் போடுவதும் குறிப்பிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தினர் சாப்பிடும் போது, முதியவர்களுடன் மது அருந்த கூடாது. புகை பிடிக்கக் கூடாது. இதன் மூலம் முதியோருக்கு மதிப்பு வழங்கப்படுகிறது.
|