• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-03 11:27:51    
உயர்ந்த எண்ணம் கொண்ட சீனர்கள்

cri
உயர்ந்த எண்ணம் கொண்ட சீனர்கள்

வழக்கமாக தங்கள் குழந்தைகள் எப்படி உருவாக வேண்டுமென்று கேட்கப்பட்டால் உலகிலேயே உயர்ந்த மருத்துவர், பெறியியலாளர், உயர் பட்டம் பெற்றவராக வர வேண்டும் என்று கூறுவதை தான் கேட்டிருக்கிறோம். இது பற்றி சீனா, தென் கொரியா, மற்றும் ஜப்பான் நாடுகளின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சீனர்கள் தங்கள் குழந்தைகளை பற்றிய உயர்வான சிந்தனை கொண்டவர்களாக உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளனர். தன்னுடைய குழந்தை குடும்பத்தை பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டுமென்பதற்கு பெய்சிங், ஷாங்ஹாய், தைவான் மற்றும் சியோல் நகர மக்கள் முதலிடம் அளித்துள்ளனர். ஆனால் ஜப்பானின் டோக்கியோவில் இந்த கருத்துக்கு இரண்டாவது இடம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களது குழந்தைகள் பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல், நட்புறவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஜப்பான் பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்கள் குழந்தைகள் தலைமைத்துவம், கோட்பாடுகள், சமூக அக்கறை மற்றும் பிறர் மதிப்பு பெறுவதில் அதிகமான ஆர்வத்தை தெரிவிக்காதது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜப்பான் பெற்றோரில் 2.2 விழுக்காட்டினர் தான் தங்கள் குழந்தைகள் கல்லூரி பட்டதாரிகள் ஆக வேண்டுமென்று தெரிவித்தனர். ஆனால் பெய்சிங், தைவான், ஷாங்ஹாய், சியோல் நகர பெற்றோரில் முறையே 70, 61, 56, 46 விழுக்காட்டினர் தங்கள் குழந்தைகள் பட்டப்படிப்பு பெற்று உயர வேண்டுமென்று தெரிவித்துள்ளனர். நல்ல பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளை படிக்க செய்வதிலும் ஜப்பான் பெற்றோர் அதிக ஆர்வம் செலுத்தவில்லை. ஆனால் ஷாங்ஹாய், பெய்சிங், சியோல், தைவான் நகர பெற்றோரில் முறையே 70, 70, 41, 34 விழுக்காட்டினர் நல்ல பள்ளிகளை தேர்ந்தெடுக்க முனைப்பாக உள்ளபோது ஜப்பானியரில் 25 விழுகாட்டினரே இதனை விரும்புகின்றனர். இந்த ஆய்வை நடத்திய பெனீஸ் நிறுவனம் டேக்கியோவில் 1007, சியோலில் 941, பெய்சிங்கில் 992, ஷாங்ஹாயில் 935, தைவானில் 2, 259 பெற்றோர்கள் மற்றும் 3 முதல் 6 வரையான குழந்தைகளிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது. நாம் என்ன எண்ணுகிறோமோ அந்த எண்ணங்கள் தான் நம்மை உருவாக்குகிறன. எனவே தங்கள் குழந்தைகள் பற்றிய உயர் சிந்தனையுடைய சீனர்களின் வருங்கால தலைமுறை உயர்வானதாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.

கலைவடிவமாகும் பறவைக்கூடு

பெய்சிங் விளையாட்டு போட்டிக்காக கட்டி முடிக்கப்பட்டடுள்ள பறவைக்கூடு எனப்படும் தேசிய விளையாட்டு அரங்கு போற்றுதற்குரிய கலைவடிவமாக உருவாகி வருகிறது. சீனாவின் Henan மாநிலத்தின் Zhengzhou வில் அதே போன்று ஒரு பறவைக்கூடு அமைப்பை சிவப்பு நிறத்தில் முக்கிய சந்திப்பில் வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். ஆறு மீட்டர்கள் குறுக்களவு கொண்ட அவ்வடிவம் 4 டன் எடை கொண்டதாகும் என்று சீன போட்டோ செய்திநிறுவனம் தெரிவித்தது. இது 2008 பெய்சிங் விளையாட்டு போட்டியின் நினைவை இப்போதே மக்கள் மனதில் விதைக்க தொடங்கிவிட்டது.