• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-04 12:32:44    
மேற்கு சீனாவின் வளர்ச்சி

cri
கடந்த திங்கள், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத்தொடர் நடைபெற்றது. சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு, சீன அரசு கடந்த சில ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை, சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினர்கள் சிலர் வெகுவாகப் பாராட்டினர்.

மேற்குச் சீனா, சிறுபான்மைத் தேசிய இனங்கள் செறிந்து காணப்படும் பிரதேசமாகும். கடந்த சில ஆண்டுகளாக, இப்பிரதேசத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக, சீன அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தமது ஊரின் புவியியல் நிலை ஒதுக்குப் புற இருந்தாலும், சீனாவின் பிற இடங்களைப் போன்று, அங்குள்ள மக்களின் வாழ்க்கை, மாபெரும் மேம்பாட்டைப் பெற்றுள்ளது. குறிப்பாக, மருத்துவச் சிகிச்சை பெறுவது கடினம் என்ற பிரச்சினை, பயனுள்ள முறையில் தீர்க்கப்பட்டுள்ளது என்று சின்சியாங் உயிகூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள Tajiki இனத்தைச் சேர்ந்த, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் உறுப்பினர் Daiyimike Diwana கூறினார்.

தற்போது, மருத்துவ சிகிச்சைக்கான செலவின் 70 விழுக்காட்டுக்கு மேலான தொகை, அரசால் வழங்கப்படுகின்றது. விவசாயிகள் மற்றும் ஆயர்கள், இச்செலவின் சிறு பகுதியை மட்டும் கொடுக்கின்றனர் என்றார் அவர்.

முன்பு, சின்சியாங் உயிகூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள வேளாண் மற்றும் கால் நடை வளர்ச்சிப் பிரதேசத்தில், மருத்துவச் சிகிச்சைப் பாதுகாப்பு முறைமை இல்லை. தற்போது, புதிய ரக வேளாண் மற்றும் கால் நடை வளர்ச்சிப் பிரதேச கூட்டுறவு மருத்துவச் சிகிச்சை அமைப்பு முறையை, சீன அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், விவசாயிகள் மற்றும் ஆயர்கள், குறிப்பிட்ட அளவிலான மானியத்தைப் பெறுவதால், அவர்களின் சுமை பெரிதளவு குறைக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, திபெத்தின் மருத்துவச் சிகிச்சை நிலைமையும், பெரிய அளவில் உயர்ந்துள்ளது. உள்ளூர் அரசு, மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் மருத்துவமனைகளை நிறுவுவது மட்டுமல்ல, திபெத் மருந்துகளைப் போன்ற தேசிய இன மருத்துவம் மற்றும் மருந்துகளையும் பெரிதும் பாதுகாத்து வருகின்றது. அது, மருந்துகளைத் தயாரிக்கும் Mi Lin மாவட்டத்துக்கு புதிய வளர்ச்சி வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் Mi Lin மாவட்டத்திலுள்ள Luo Ba இனத்தைச் சேர்ந்த, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினர் Qian Jin அறிமுகப்படுத்தினார்.

எமது Mi Lin மாவட்டத்தில், செழுமையான மூலிகைகள் இருக்கின்றன. தற்போது, மீலிகைகளைப் பயிரிடுவது பாதுகாக்கப்படுகின்றது. தன்னாட்சிப் பிரதேசத்தின் திபெத் இன மருந்தாக்கத் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகள், இங்கு அடிக்கடி வந்து, மீலிகைகளை பறித்து வருகின்றன. தன்னாட்சிப் பிரதேசத்தின் வர்த்தக நிறுவனங்கள், இங்கு வந்து, மருந்துகளைக் கொள்வனவு செய்து வருகின்றன என்றார் அவர்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடரின் காலத்தில், நாட்டின் கொள்கைகள் பற்றியும், பொது மக்கள் அக்கறை செலுத்தும் பிரச்சினைகள் பற்றியும், தேசிய கமிட்டியின் உறுப்பினர்கள் ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர். சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசம் மேலும் விரைவாக வளர்வதை, அவர்களது முன்மொழிவுகள், தூண்டியுள்ளன. திபெத்திலுள்ள Lin Zhi பிரதேசத்தின் மிகப் பெரிய கோயிலான La Lu கோயிலின் வாழும் புத்தரான Luosangdanbainima, ஒரு மூத்த உறுப்பினராக ஆகியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், Lin Zhi விமான நிலையத்தின் கட்டுமானம் பற்றிய அவரது முன்மொழிவு, கடந்த ஆண்டில், நனவாகியுள்ளது.

Lin Zhi பிரதேசத்தில் விமானப் போக்குவரத்து வசதி இருக்கிறது. ச்சிங்காய்-திபெத் இருப்புப் பாதையும், பொக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இப்பொழுது, பெய்ஜிங், குவாங் ச்சோ, ஃபு ச்சியான் முதலிய இடங்களிலிருந்து, திபெத்துக்கு செல்ல, நல்ல வசதி இருக்கிறது என்றார் அவர்.

இதைத் தவிர, சிறுபான்மைத் தேசிய இன மக்களின் கல்வியில், சீன அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகால பணிகளை மீளாய்வு செய்த போது, சீனத் தலைமையமைச்சர் Wen Jiabao, இது தொடர்பாக சீனா பெற்றுள்ள சாதனைகளை அறிமுகப்படுத்தினார்.

5 ஆண்டு காலத்தில், கல்வியில் ஒதுக்கீடு செய்த தேசிய நிதி, 24 கோடியே 30 இலட்சத்தை எட்டியுள்ளது. முந்தைய 5 ஆண்டு காலத்தில் இருந்ததை விட, இது 1.26 மடங்கு அதிகம். மேற்கு சீனாவில், 9 ஆண்டு கால கட்டாயக் கல்வி முறையை அடிப்படையில் பரவலாக்குவது, இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையோரிடையே எழுத்தறிவின்மையை அடிப்படையில் ஒழிப்பது என்பவை, திட்டத்திற்கிணங்க நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் உறுப்பினரும், சீன மத்தியத் தேசிய இனப் பல்கலைக்கழகத்தின் தலைவருமான, கொரிய இனத்தைச் சேர்ந்த E Yitai, இது குறித்து உடன்பாடு தெரிவித்தார். அவர் கூறியதாவது,

தற்போது, சீன மத்தியத் தேசிய இனப் பல்கலைக்கழகத்தில், 56 தேசிய இனங்களின் மாணவர்கள் இருக்கின்றனர். சின்சியாங், திபெத் மற்றும் சீனாவின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த சிறுபான்மைத் தேசிய இன மாணவர்கள், இங்கு அதிகமாக உள்ளனர். படிப்புத் துறைகள், சிறப்புத்துறைகள், மாணவர்களின் திறமை மற்றும் கல்வி அறிவு பயிற்சி ஆகியவற்றில், எமது பல்கலைக்கழகம், அவர்களுக்கு மேலதிக வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றார் அவர்.

சீனா, பல தேசிய இனங்களைக் கொண்ட நாடாகும். வரலாறு, இயற்கை மற்றும் சமூகக் காரணங்களால், இந்நாட்டிலுள்ள சிறுபான்மைத் தேசிய இனப் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி, ஒருங்கிணைப்பாக இல்லை. கடந்த சில ஆண்டுகளாக, மேற்குப் பகுதியிலுள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவது பற்றி, சீன அரசு, சிறுபான்மைத் தேசிய இனங்களின் கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்ப நிலையை பாடுபட்டு உயர்த்துவது, மருத்துவச் சிகிச்சை மற்றும் நலவாழ்வு இலட்சியத்தை முன்னேற்றுவது உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக, சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசம், பெரிதும் வளர்ந்துள்ளது.