• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-04 12:27:07    
சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதி SA ZHEN

cri
49 வயதான SA ZHEN அம்மையார், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகரிலுள்ள 2வது REN MIN மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர் ஆவார். இவ்வாண்டின் தொடக்கத்தில், சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாக அவர் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரில், திபெத்தின் மருத்துவ சேவைத் துறையின் வளர்ச்சி நிலை பற்றி நடுவண் அரசுக்கு அறிமுகப்படுத்தி, தனது முன்மொழிவுகளை வழங்க வேண்டும் என்பது, அவரது மிகப் பெரிய விருப்பமாகும்.

சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ், திபெத் பிரதிநிதிக் குழுவில் கலந்து கொண்டு, பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த நாள், காலை 5 மணியளவில் SA ZHEN படுக்கையை விட்டு எழுந்தார். திபெத் இனத்தின் மிக அழகான ஆடையை அணிந்த அவர், கூட்டத்தில் நிகழும் உரையை சில முறை உணர்வுப்பூர்வமாக படித்தார். செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது—
"உணர்ச்சிவசப்பட்டதால், இரவில் தூக்கத்திலிருந்து பல முறை விழித்து எழுந்தேன். பொருளாதாரம் அவ்வளவு வளர்ச்சி அடையாத பகுதியாக திபெத் விளங்குகிறது. குறிப்பாக, விவசாய மற்றும் மேய்ச்சல் பகுதியில், விவசாயிகள் மற்றும் ஆயர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் இன்னல்கள் அதிகம். பொதுச் செயலாளர் ஹு சிந்தாவ், திபெத்தில் பணிபுரிந்ததால், இந்நிலைமையைத் தெரிந்து கொண்டுள்ளார். மருத்துவ சிகிச்சை பெறும் போது விவசாயிகளும் ஆயர்களும் மனநிறைவு அடைய முடியுமா, அவர்களுக்கு வசதி கிடைக்குமா என்பனவற்றில் அவர் கவனம் செலுத்துகிறார்" என்றார் அவர். அன்று காலை 10 மணிக்கு, திபெத் பிரதிநிதிக் குழுவின் விவாதம் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. உரை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்த SA ZHEN அம்மையார், திட்டவட்டமான எண்ணிக்கைகளையும் பெருவாரியான தரவுகளையும் பயன்படுத்தி, திபெத்திலுள்ள விவசாய மற்றும் மேய்ச்சல் பகுதியின் மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதாரத் துறையின் வளர்ச்சி நிலையை அறிமுகப்படுத்தினார்.
"தற்போது விவசாய மற்றும் மேய்ச்சல் பகுதிக்கான மருத்துவ சிகிச்சை முறைமை, திபெத்தின் மாவட்டங்களிலும் வட்டங்களிலும் 100 விழுக்காடாக பரவல் செய்யப்பட்டுள்ளது. விவசாய மற்றும் ஆயர் குடும்ப கர்ப்பினி பெண்கள்மருத்துவ மனையில் பிரசவிப்பதற்கான செலவு, 100 விழுக்காடு திரும்ப வழங்கப்படும். திபெத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஆயர்களும் இம்முறைமையிலிருந்து பயன் பெற்றுள்ளனர்" என்றார் அவர்.
லாசா நகரிலுள்ள 2வது REN MIN மருத்துவ மனையில், SA ZHEN அம்மையார் சுமார் 30 ஆண்டுகளாக பணி புரி்ந்துள்ளார். திபெத்தின் மருத்துவ சிகிச்சை நிலைமையில் ஏற்பட்ட மேம்பாடுகளை அவர் நேரில் கண்டு உணர்ந்துள்ளார். தற்போது திபெத் மக்களின் சராசரி ஆயுள் காலம் 67 வயதை எட்டியுள்ளது. இது 1950ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்ததை விட 31 வயதுக்கு மேல் அதிகரித்துள்ளது. திபெத்தின் மருத்துவ சிகிச்சை துறைக்கு நடுவண் அரசு அளித்த முக்கியத்துவமும் ஆதரவும், இவ்வளர்ச்சிக்கான காரணமாகும் என்று அவர் கூறினார். மேலும் அவர் முன்மொழிவுகளை வழங்கினார்.

"திபெத்தில் மருந்துகளுக்குப் பதிலாக, மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. குறிப்பாக, மேய்ச்சல் பகுதியில் மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் குறைவு. பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் மேய்ச்சல் பகுதிக்கு வந்து பணிபுரியும் முன், பெரிய மருத்துவமனையில் பயிற்சி செய்ய வேண்டும் என கருதுகின்றேன். இந்த மாணவர்கள் கற்றுக் கொண்டுள்ள அறிவு, பெரும்பாலும் தத்துவ அறிவாகும். நடைமுறை பயிற்சி அவர்களுக்கு தேவைப்படுகிறது" என்றார் SA ZHEN அம்மையார்.
தவிரவும், மற்ற மாநிலங்களின் மருத்தவ மனைகளுடன் பரிமாற்ற திட்டங்களை திபெத் அதிகமாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில், SA ZHEN அம்மையாரின் முயற்சிகள் மூலம், லாசா நகரிலுள்ள 2வது REN MIN மருத்துவ மனைக்கும் பெய்ஜிங் மருத்துவ மனை, சீன-ஜப்பானிய நட்புறவு மருத்துவ மனை ஆகியவற்றுக்கும் இடையில் தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அவர் சேர்ந்த மருத்துவ மனை, ஓரிரு இளம் மருத்துவரை மேற்படிப்புக்காக பெய்ஜிங்கிற்கு அனுப்புகிறது.
விவாதக் கூட்டம் நிறைவுற்ற பின், பிரதிநிதிகள் சிறிது நேரம் ஓய்வு பெற்றனர். அன்று பிற்பகல், தொடர்புடைய துறையின் ஏற்பாட்டில், SA ZHEN அம்மையார் ஏனைய தேசிய மக்கள் பேரவைப் பிரநிதிகளுடன் சேர்ந்து, புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பறவைக் கூடு என்ற ஒலிம்பிக் விளையாட்டு அரங்கையும், நீர்கன சதுரம் என்ற நீச்சல் அரங்கையும் பார்வையிட்டார். அவர் கூறியதாவது—
"சீன மக்களின் தொழில் நுட்பங்களையும் பகுத்தறிவையும் ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளின் கட்டுமானம் உலகத்துக்கு கோடிட்டு காட்டியுள்ளது. நீர்கன சதுரம் என்ற அரங்கை கட்டியமைக்கும் பொருள் பற்றிய சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்தின் அறிமுகத்தை நான் கண்டேன். இப்பொருள் சிறப்பாக உள்ளது என அப்போது விளக்கம் செய்யப்பட்டது. நான் தொட்டு பார்த்தேன். இது கண்ணாடி போல் இருக்கிறது" என்றார் அவர்.

SA ZHEN அம்மையாரின் மகனுக்கு வயது 20. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, பெய்ஜிங்கிற்கு வந்து கால்பந்து போட்டியைக் கண்டு ரசிப்பது என்பது அவரது விருப்பம். ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளைப் பார்வையிட்ட போது தாம் கண்ட அனைத்தையும் SA ZHEN அம்மையார் மகிழ்ச்சியுடன் தொலைபேசி மூலம் மகனிடம் கூறினார்.
இரவு 7 மணிக்கு, அவர் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தார். திபெத் தொலைக்காட்சி நிலையத்தின் செய்தி நிகழ்ச்சியைக் கண்டு களிப்பது வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில், பிரதிநிதிகள் மாலையில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளைப் பார்வையிட்டது பற்றிய அம்சம் தான் ஒளிபரப்பப்பட்டது.
சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் முதல் முறையாக கலந்து கொண்ட 10க்கு அதிகமான நாட்கள், SA ZHEN அம்மையாரின் மனதில் தெளிவாகவும் ஆழமாகவும் பதிந்துள்ளன. தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதி என்ற முறையில் தனது கடமையை எவ்வாறு செவ்வனே நிறைவேற்றுவது என்பது பற்றி, அவர் தெளிவான எண்ணத்தைக் கொண்டுள்ளார்.
"தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாக தெர்ந்தெடுக்கப்பட்டமை, மிகவும் புனிதமானது. நாடு முழுவதிலும் இத்தகைய பிரதிநிதிகள் 2000க்கு அதிகமானவர்கள் மட்டுமே. ஆனால், நாட்டின் எதிர்கால வளர்ச்சி பற்றிய முடிவு அவர்களால் தான் செய்யப்படும். இனிமேல், அடி மட்ட நிலை மருத்துவர்கள் எவ்வாறு பணி புரிகின்றனர் என்பதை அதிகமாக அறிந்து கொள்வேன். அரசுக்கு வெளிப்படுத்த வேண்டிய அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வேன். அடி மட்ட நிலைக்கு எவ்வாறு செவ்வனே சேவை புரிந்து, தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதை அதிகமாக கருத்தில் கொள்வேன்" என்றார் அவர்.