லாசா நகரில் புணரமைப்புப் பணி
cri
கடந்த சில நாட்களில் மார்சு திங்கள் 14 வன்முறை சம்பவங்கள் விட்டுச்சென்ற இடிபாடுகளில் லாசா மக்கள் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டு, அன்பு மூலம் காயங்களைக் குணப்படுத்த முயற்சி செய்துள்ளனர். மார்சு திங்கள் 29ம் நாள் முதல், லாசா நகரில் கூட்டாகச் செயல்பட்டு, வாழ்க்கையை புதுப்பிக்கின்றோம் என்ற தலைப்பிலான நன்கொடை நடவடிக்கை நடைபெற துவங்கியது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் இதில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு, சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்றனர். மார்சு திங்கள் 14 சம்பவங்களில், ஹான் இன சிறுவனைக் காப்பாற்ற திபெத்தின மருத்துவர் Losang Tsering காயமடைந்தார். கடந்த சில நாட்களாக, பலர் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தனர். அவர் சிறந்த திபெத் இளைஞர் என்ற விருது வழங்கப்பட்டார். சம்பவங்களுக்குப் பின், திபெத்தில் பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று திபெத் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் Tsashi கூறினார்.
|
|